முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செலவைக் குறைக்கும் '3 பர்ஃபரேஷன்' (3 Perforation):

திரைப்படமெடுக்க பொதுவாக 400ft ஃபிலிம் ரோல்கள் பயன்படுத்தப்படுகிறது. 35மிமீ ஃபிலிமில் இரண்டு பக்கமும் வரிசையாகத் துளைகள் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தத் துளைகளுக்கு 'பர்ஃபரேஷன் (Perforation)'என்று பெயர். இந்த 'பர்ஃபரேஷன்'கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும்.  இந்தத் துளைகள், கேமராவில் லென்சுக்குப் பின்புறம் பிம்பம் பதியுமிடத்தில், ஃபிலிமை நிலையாக நிறுத்தப் பயன்படுகிறது. ஒரு பிம்பம், இந்தத் துளைகளின் (Perforation) வரிசையில் நான்கு துளைகளுக்கு இடைப்பட்ட பரப்பளவில் பதிக்கப்படுகிறது. அதாவது ஒரு frame-க்கு 4 Perforations தேவைப்படுகிறது.




'3 பர்ஃபரேஷன்' தொழில்நுட்பம் என்பது மூன்று துளைகளுக்கு இடைப்பட்ட பரப்பளவில் பிம்பத்தைப் பதியவைப்பது. உங்களுக்குத் தேவையான 'ஆஸ்பெக்ட் ரேஸியோவில்(Aspect Ratio)'-வில் பயன்படுத்திக்கொள்ளலாம். '4 பர்ஃபரேஷன்'-இல் 'சினிமாஸ்கோப்(Cinema scope)' -இன் 'ஆஸ்பெக்ட் ரேஸியோவான 1:2.35 இல் பிம்பத்தைப் பதிவுசெய்யும் போது ஒரு பிம்பத்திற்கும் மற்றொரு பிம்பத்திற்கும் இடையில் இடைவெளி வரும், இந்த இடைவெளி நெகட்டிவை வெட்டி ஒட்டப் பயன்படும். ஆனால் இப்போது 'DI' முறையில் 'நெகட்டிவ் கட்டிங் (Negative Cutting)' நடைபெறுவதில்லை. அதனால் நமக்கு இந்த இடைவெளி தேவைப்படுவதில்லை. எனவே அந்த இடத்தையும் சேர்த்து பிம்பத்தைப் பதிவுசெய்துகொள்ளலாம். இதில் இடைவெளியே இல்லாமல் பிம்பம் பதிவுசெய்யப்படும்.




இப்படி இடத்தை வீணாக்காமல் பதிவுசெய்யப்படும் நெகட்டிவானது '4 பர்ஃபரேஷன்' முறையைவிட 25% அதிக இடத்தைக் கொடுக்கிறது. அதாவது அதிக நேரம் பதிவுசெய்ய முடிகிறது. 33% அதிக நேரத்துக்கு நெகட்டிவ் ஓடுகிறது.


400 அடி படச்சுருள் - '4 பர்ஃபரேஷன்' = 4 நிமிடம் 26 நொடிகள்


400 அடி படச்சுருள் - '3 பர்ஃபரேஷன்' = 5 நிமிடம் 55 நொடிகள்




இதனால் நமக்கு கிடைக்கும் பயன்கள்:



1. 25% அதிக இடம்.
2. ஒரு நெகட்டிவில் அதிக 'ஷாட்ஸ்'(shot)' எடுக்க முடியும்.
3. நீளமான 'ஷாட்ஸ்' எடுக்கமுடியும்.
4. குறைந்த அளவில் படச்சுருள்கள் வாங்கினால் போதும்.
5. நெகட்டிவ் டெவலப்பிங்கில்(Negative Developing) -, 'டெலிசினியில்'(Tele Cine) செலவு குறையும்.


இன்று திரைப்படம் எடுப்பதில் செலவைக்குறைக்க பல வழிகள் முயலப்படுகிறது. அதில் ஒன்று, படம் பிடிக்கத் தேவைப்படும் 'நெகட்டிவ்'(Negative)-இன் பயன்பாட்டைக் குறைப்பது. ஒரு படம் எடுக்க இன்று பொதுவாக '80,000' அடி தேவைப்படுகிறது. ( ஒரு 2.30 மணி நேரத் திரைப்படம் உத்தேசமாக 15,000 அடி இருக்கவேண்டும். அதைப் படம்பிடிக்க 45,000 அடி நெகட்டிவைப் பயன்படுத்தலாம் என்பது விதி. அதாவது மூன்று மடங்கு. ஆனால் அப்படிச் செய்ய முடிவதில்லை. இங்கே 45,000 -த்திலிருந்து 3,00,000 அடிக்கும் மேலாக நெகட்டிவைப் பயன்படுத்தும் படங்கள் உண்டு. பொதுவாக 80,000 அடி)


80,000 அடி நெகட்டிவ் என்பது 400 அடி பிலிம் சுருளில் 200 ஆகும்.


400அடி சுருள் உத்தேசமாக (april.2010ல்) 13,000 ரூபாய் விலை


ஆகவே 200 x 400 என்பது 26,00,000 ரூபாய்.



'3 பர்ஃபரேஷன்' தொழில்நுட்பம் பயன்படுத்தினால்:
25% அதிகமான கிடைக்கிறது என்பதினால்

80,000 அடி நெகட்டிவிற்கு பதில் 60,000 அடி வாங்கினால் போதுமானது.


60,000=150 x 400 அடி படச்சுருள்
150 x 13000 Rs. = Rs.19,50,000


இதில் நமக்கு மிச்சமாவது Rs.26,00,000 - 19,50,000 =6,50,000 Rs.


உங்களின் நெகட்டிவ் தேவை அதிகரித்தால்கூட இந்த சேமிப்பும் கூடும்.


இந்த மிச்சம்பிடிக்கப்படும் பணத்தை நீங்கள் 'DI' க்குப் பயன்படுத்தலாம்.  ஏனெனில் 'DI' செய்யும் படங்களுக்கு மட்டும்தான் '3 பர்ஃபரேஷன்' தொழில்நுட்பம் பயன்படுத்த முடியும்.


இன்றைக்கு (April 2010) ஒருபடத்திற்கு 'DI' செய்ய உத்தேசமாக 12,00,000 ரூபாய் ஆகிறது. '3 பர்ஃபரேஷனில்' நீங்கள் சேமித்த பணத்தை இதற்குப் பயன்படுத்தும்போது கூடுதலாகச் செலவு செய்வது குறைகிறது.


அதாவது குறைந்த செலவில் ஒரு 'DI' படம் செய்ய முடியும். ஏன் 'DI' செய்ய வேண்டும் என்பதை அறிய மற்றொரு கட்டுரையை பாருங்கள்.





கருத்துகள்

  1. Good article brother!!!
    congrats for your attempt!!!

    First time in the world,online cinematography technical details in Tamil.......

    very good for Producers,Directors and Student Cinematographers.....

    Leep up the good work!!!

    very happy Iam the first FAN of your cinematography Blog!!

    பதிலளிநீக்கு
  2. Hi Sir...

    I don't know Tamil.I only know to speak and understand a little.I am a Malayali(Kerala).Can you post English articles in this Blog or other? Please...
    It will be a great help for me...

    Rahul Krishnan
    http://rahulkrishnan.yolasite.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,