ஃபோட்டோகிராபியைப் பொருத்தமட்டும் ரொம்ப புரபஷனலாக இருக்கு. பத்து நிமிஷம் படத்த பார்த்த உடனே மற்ற மாநிலப் படங்கள்ல இல்லாத ஒரு விஷ்வல் சென்ஸ் நம்ம தமிழ் டைரக்டர்க்கும் சரி சினிமாட்டோகிராஃபர்க்கும் இருக்கும் என்பதை ரொம்ப கிளியரா எஃபெக்ட்டிவா அதே நேரத்தில் இண்டலிஜண்டா, எந்த லொக்கேஷனில் வேண்டுமானாலும் ஷூட் செய்யலாம் ஆனா தனக்கு வேண்டிய எஃபெக்ட் வரும் என்கிற கான்பிடண்ட் சினிமேட்டோகிராபர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கிடம் இருக்கிறது. -ஹாசினி பேசும் படம்.
(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...
ur bolg's new template is very nice vijay
பதிலளிநீக்குநன்றி sam..
பதிலளிநீக்கு