முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Phantom என்னும் அதிவேகக் கேமரா

நாம் வழக்கமாக நொடிக்கு 24 frames (24fps) என்ற கணக்கில் திரைப்படம் எடுக்கிறோம். அதை அப்படியே நொடிக்கு 24 frames-ஆக திரையிடும்போது செயல்கள் இயல்பாக இருக்கிறது. Slow motion என்பது நொடிக்கு 48frames (48fps) அல்லது அதற்கு மேலாக 150fps வரை (ARRI 435-இல் எடுக்கலாம்) எடுத்து, 24 frames-ஆகத் திரையிடும்போது செயல்கள் மிக மெதுவாக இருக்கும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் நம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் கதாநாயகன் வில்லனை ஓடிவந்து உதைப்பது, ஓங்கிக் குத்துவது என Slow motion-னில் பார்த்திருப்பீர்கள்.


அதேபோல் நொடிக்கு 1000 frames (1000fps) என்ற அளவில் எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். நம்முடைய செயல்கள் எல்லாம் இன்னும் மெதுவாக இருக்கும். மழை பொழிவது, கண்ணாடி கீழே விழுந்து உடைவது என பல செயல்களைத் தெளிவாக, ரசனையாகத் திரையில் பார்க்கமுடியும். அப்படி படம் எடுக்க 'Phantom' என்னும் இந்தக் கேமரா உதவும்.

'Phantom' கேமரா 'HD' தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இது பிம்பங்களை 'RAW' files-ஆக சேமிக்கிறது. 14-bit சென்சார் 42-bit color space-இல் பதிவு செய்கிறது.


கேமரா, HD view finder, BNC cable, Ethernet cable, Power cables மற்றும் சில rods. இந்த கேமராவை இயக்க தேவையான கணினி, இவைதான் இந்தக் கேமராவோடு வரும் பாகங்கள்.BNC cable கேமராவையும், மானிட்டரையும் இணைப்பதிற்கு, Ethernet cable-ஐ கொண்டு கேமராவைக் கணினியுடன் இணைக்கவேண்டும், இந்த கேமரா கணினியின் துணையுடன் இயங்குகிறது. கேமராவை இயக்க மென்பொருள் இருக்கிறது. 24V DC மின்சாரத்தில் இயங்குகிறது.


CMOS சென்சாரில் படம் பிடிக்கிறது, 2048x2048 Pixels அளவுக்கொண்ட சென்சார். பிக்சல் ரேஷியோவைப் பொருத்து நொடிக்கு எத்தனை frames என்பது மாறுகிறது. அதாவது நமக்குத் தேவையான ரெஸலுஷனைப் (Resolution) பொருத்து கேமராவின் வேகம் மாறுகிறது. முழுதாக 2048x2048 Pixels-இல் படம் எடுத்தால் 555fps வேகத்தில் படம் எடுக்கலாம். அதுவே HD 16:9 (1920 X 1080)-இல் படம் எடுத்தால் 1000fps-இல் எடுக்கலாம். HD 16:9 (1920 X 1080) என்பது நாம் வழக்கமாகப் பார்க்கும் Cinemascope திரைப்படத்துக்குப் போதுமான அளவு.


எனவே இந்தக் கேமராவைக் கொண்டு 1000fps-இல் படமெடுக்கலாம் என பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் Resolution-னைப் பொருத்து இந்த கேமராவில் நொடிக்கு எத்தனை frames என்பதை மாற்றிக்கொள்ளலாம்.


Resolution  - Speed Chart (fps)


2048 x 2048     -          555
2048 x 1104 (2k 1.85)   -        1,029
2048 x 872 (2k 2.35)    -        1,302
1920 x 1080 (HDTV 16:9) -        1,052
1632 x 1200             -          946
1280 x 800              -        1,419
1280 x 720 (HDTV 16:9)  -        1,576
1152 x 896              -        1,267
800 x 600               -        1,890
640 x 480               -        2,316
512 x 512               -        2,213
256 x 256               -        4,410


கேமராவோடு 16GB internal flash memory card இணைக்கப்பட்டுள்ளது. அதில் 1000fps, 1920x1080  பிக்சல் ரேஷியோவில் படம் எடுத்தால் 4 நொடிக்கு பிம்பத்தை சேமிக்கலாம். அதாவது 4400 frames. அதுவே 500fps என்றால் 8 நொடியும், 250fps என்றால் 16 நொடியும் சேமிக்கலாம்.
'CineMag' என்னும் 'Hard disc' 512GB -இல் கிடைக்கிறது. இதை கேமராவோடு இணைத்துக்கொள்ளலாம். இதில் 66 நிமிடம் பிம்பங்களை சேமிக்கமுடியும். வேறு கொள்ளவும் கொண்ட Hard disc -கும் கிடைக்கிறது.


Phantom CineStation என்னும் கருவியின் மூலம், 'CineMag'-இருந்து தகவல்களை நாம் நம் எடிட்டிங் கணினிக்கும், சேமிக்கும் Hard disc-க்கும் மாற்றிக்கொள்ளலாம்.


இந்த கேமராவில் சில வகைகள் உண்டு.


Phantom 65 - 65mm  வகைக்கேமரா
Phantom HD GOLD - New version கேமரா.


இந்தக் கேமரா இங்கு சென்னையில் இருப்பதாகத் தகவல் உண்டு. மும்பையில் வாடகைக்கு கிடைக்கிறது.


இந்தக்கேமராவில் எடுத்த விடியோவைப்பார்க்ககருத்துகள்

 1. good informative post enru sonnal ungalukku pidikkathu,but vera enna solvathu!

  Discovery channalil time warp prog la 5000 fps ellam shoot seykirarkal same type camera thana?

  பதிலளிநீக்கு
 2. சரவணன், திருப்பூர்.20 மே, 2010 அன்று 5:53 AM

  கருவிகள் அறிமுகத்திற்கு நன்றி.

  எங்கே மூன்றாவது பாகம் ?

  ஒரு சந்தேகம், 360 டிகிரியில் புகைப்படம் இணையத்தில் பார்க்கிறோம். அதை எந்த மாதிரி கேமராக்களை கொண்டு படம் எடுப்பது?

  பதிலளிநீக்கு
 3. சரவணன், திருப்பூர்.20 மே, 2010 அன்று 6:02 AM

  டிஸ்கவரி சேனலில் Time Wrap - "காலத்தின் குறுக்கு நெசவு" நிகழ்ச்சியில் உபயோகப்படுதும் கேமெரா இந்த வகையை சார்ந்ததா ?

  பதிலளிநீக்கு
 4. Excellent vijay sir.

  ரெஷெல்யூசன் பற்றியெல்லாம் இவ்வளவு தெளிவாக விளக்கியிருப்பதற்கு மிக்க நன்றி. விரைவில் ஒரு ஆவணப்படம் இயக்க இருக்கின்றேன், உங்கள் மேலான ஆலோசனைகள் தேவை.

  பதிலளிநீக்கு
 5. நல்ல விவரிப்பு...
  டென்மார்க் படம் ஆன்ட்டிகிரைஸ்ட் படத்தில் பாந்தம் கேமராதான் பயண்படுத்தி எடுத்து இருப்பார்கள்...ஆம்ஸ்ட்ராங்.. நீங்கள் நிச்சயம் அந்த படத்தை பார்க்கவேண்டும்,...

  பதிலளிநீக்கு
 6. சூப்பர் கேமரா! இந்தப் பதிவில் உள்ள வீடியோக்கள் அந்தக் கேமராவால் எடுக்கப்பட்டவைகளா என்றுப் பாருங்கள்.
  http://prabanjapriyan.blogspot.com/2010/03/blog-post_22.html
  http://prabanjapriyan.blogspot.com/2010/04/2.html
  http://prabanjapriyan.blogspot.com/2010/04/3.html
  ஆமா... போன வாரக் கேள்விகளுக்கு பதில்கள் எங்கே?

  பதிலளிநீக்கு
 7. அடேங்கப்பா.. என்னோட 500GB hard disk-ல 600 படங்கள் வச்சுருக்கேன்.. அதே 512GB-ல 66 நிமிடங்கள்தான் எடுக்க முடியும்னா, எவ்வளவு துல்லியமா இருக்கும்?? இதெல்லாம் ஒரு தடவையாவது வீடியோ எடுத்து பாக்கணும்.. நல்ல அறிமுகம் விஜய்..

  பதிலளிநீக்கு
 8. நன்றி நண்பர்களே..
  ஆமாம், Time Wrap - 'காலத்தின் குறுக்கு நெசவு' நிகழ்ச்சியில் உபயோகப்படுத்தும் கேமரா வகையைச்சேர்ந்தது தான் இது.

  சரவணன்://எங்கே மூன்றாவது பாகம் ?//
  தொடர்ந்து அதைப்பற்றி எழுத நிறைய இருக்கின்றது, மிக நீண்ட தொடர் அது, இடையில் இளைப்பாறுதல் போல சில வெளி விஷயங்களைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

  //360 டிகிரியில் புகைப்படம் இணையத்தில் பார்க்கிறோம். அதை எந்த மாதிரி கேமராக்களை கொண்டு படம் எடுப்பது?//
  -அதற்கென கேமராவும் மென்பொருள்களும் உள்ளன. அதைப்பற்றி தனி பதிவாக எழுதுகிறேன். நீங்கள் குறிப்பிடுவது stills or movie?

  பதிலளிநீக்கு
 9. சரவணன், திருப்பூர்.21 மே, 2010 அன்று 9:46 PM

  360 டிகிரி கோணத்தில் புகைப்பட நுட்பத்தை பற்றி கூறவும்.

  பதிலளிநீக்கு
 10. செ.சரவணக்குமார்..
  //விரைவில் ஒரு ஆவணப்படம் இயக்க இருக்கின்றேன், உங்கள் மேலான ஆலோசனைகள் தேவை.//

  கண்டிப்பா.. எப்பவேண்டுமானாலும் என்னை அழையுங்கள்..

  பதிலளிநீக்கு
 11. சரவணன், திருப்பூர்...

  கொஞ்சம் பொறுங்கள்..பதிவாக போட முயற்சிக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 12. M.S.E.R.K.
  //ஆமா... போன வாரக் கேள்விகளுக்கு பதில்கள் எங்கே?//

  5Cs சம்பந்தமான அடுத்தக் கட்டுரையில் பதில் தருகிறேன்..

  பதிலளிநீக்கு
 13. M.S.E.R.K.
  //ஆமா... போன வாரக் கேள்விகளுக்கு பதில்கள் எங்கே?//

  5Cs சம்பந்தமான அடுத்தக் கட்டுரையில் பதில் தருகிறேன்..

  பதிலளிநீக்கு
 14. நண்பர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கு தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது சிறு திருத்தம் மட்டும் செய்தால் இன்னும் பலர் படிக்க உதவியாக இருக்கும். அதாவது உங்கள் வலைத்தளத்தை கூகிள் ரீடர் மற்றும் இதர ரீடர்களில் முழுவதுமாக படிப்பதற்கு ஏதுவாக மாற்றவும். ஏன் என்றால் அனைத்து ரீடர்களிலும் முதல் அத்தியாயம் மட்டுமே தெரிகிறது. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்களில் இறைவன் துணை இருப்பான்

  பதிலளிநீக்கு
 15. கருவுகளின் விளக்கம் அருமை...!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன