இப்படம் எடுப்பதனால் உலகம் மாறிவிடுமென்று நான் எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்'ஸ் லிஸ்ட் எடுத்தது கூட அப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிப்பதற்கே. அப்படத்தை நான் எடுத்ததற்கு காரணம் அக்கதை சொல்லப்படவேண்டும் என்பதனால்தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுசெய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்தவர். இதில் 'ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட்' இரண்டாம் உலகப்போரின்போது இட்லரின் நாஜிக்கள் யூதர்களைப் படுகொலை செய்ததைப்பற்றி விவரிக்கும் படம். 1972-இல் ஜெர்மானிய நகரமான மூனிச்சில் நடந்த ஒலிப்பிக்கில் 'கறுப்பு செப்டம்பர் (BSO)' என்று அழைக்கப்பட்ட பாலஸ்தீனிய போராளிக்குழு, பதினோரு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, இஸ்ரேலோடு பேரம் பேசினார்கள். பதினோ...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!