முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Inception - ஒரு பார்வை

'Inception' படம் நேற்றுதான் பார்த்தேன். வழக்கம் போல 'நோலன்', தான் ஒரு தனித்துவமான படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார். படத்தை ஏற்கனவே பார்த்து புரிந்துகொண்டவர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள், புரியாதவர்கள் ஆர்வம் இருந்தால் புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். 


'Inception' பற்றி பதிவு போடாமல் இருந்தால் அது தானைத்தலைவன் 'நோலன்' அவர்களுக்கு செய்யும் அவமரியாதை, ஆனால் கதையைப்பற்றி பேசி உங்களையும் குழப்ப நான் விரும்பவில்லை. அதனால் அந்தப்படத்தின் சில தொழில்நுட்பங்களையும், உருவாக்கத்தைப்பற்றியும் சில தகவல்கள் இங்கே.






இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் 'Wally Pfister'. இவர்தான் நோலனின் மற்ற படங்களான Memento, Insomnia, Batman Begins, The Prestige, The Dark Knight படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர்.





உபயோகித்த கேமராக்கள்:


35mm: Panaflex Millennium XL, PFX System 65 Studio, PanArri 435ESA, 235


65mm: 35mm-ஐப் போல 65mm படச்சுருளைப் பயன்படுத்தும் கேமரா, முன்பெல்லாம் இதைக்கொண்டுதான் 70mm படங்கள் உருவாக்கப்பட்டன.


Imax: இன்று உலகில் இருக்கும் பெரிய பரப்பளவுக்கொண்ட ஃபிலிம் கேமரா. 35mm  '4 Perforation'-இல் பிம்பம் பதிவுசெய்யப்பட்டால் இதில் '15 Perforation' பிம்பம் பதிவுச்செய்யப்படுகிறது. இந்தப்படத்தின் சில சண்டைக்காட்சிகள் Imax-இல் எடுத்திருக்கிறார்கள்.


Vista Vision 8-perf 35mm - for aerial shots: இது 35mm ஃபிலிமைப் பயன்படுத்தும் கேமராதான். ஆனால் மற்ற கேமராக்களைப்போல ஃபிலிமில் 'Vertical-ஆக பிம்பத்தைப் பதிவுசெய்யாமல், 'horizontal'-ஆக பதிவுசெய்கிறது. இந்த கேமரா 'Paramount Pictures'-ஆல் 1954ல் உருவாக்கப்பட்டது. துல்லியமான படங்களுக்காக (finer-grained projection print) பயன்படுத்தப்பட்டது. பின்பு அதிநவீன 'finer-grained films' வந்த பிறகு இது தேவையற்றதாகிவிட்டது.




அதிவேக ஷாட்டுகளுக்காக:

Photo-Sconics 4ER-360fps: இந்த கேமராக்களைப்பற்றி தனிப்பதிவுகளே போடலாம். இப்போதைக்கு அதன் இணைய தளங்களுக்குச் செல்லுங்கள்.

4E Rotary Prism-1500fps  
Vision Research Phantom HD




லென்ஸுகள்:
Panavision Primo, Super High Speed, C-Series, E-Series, G-Series, System 65mm lenses.


உபயோகித்த படச்சுருள்கள்:
Kadok vision3-500T(5219), 250D(5207)
Printed on Kodak Vision 2383


ஒளிப்பதிவாளர் 'Wally Pfister' தான் உபயோகித்த படச்சுருள்களைப்பற்றி குறிப்பிடும்போது, தனக்கு 5219 மற்றும் 5207 போதுமானதாக இருப்பதாக சொல்கிறார். பகலில் 5207 பயன்படுத்தும்போது அதிக ஒளி இருந்தால் ND ஃபில்டர்களை உபயோகித்துக் கொள்வதாகச் சொல்கிறார். வண்ண வேறுபாட்டைக் காட்ட தான் படச்சுருளை மாற்றுவதில்லை என்றும் அதற்கு பதிலாக ஒளியமைப்பில் அதைக் கொண்டு வருவதாகவும், இரவு காட்சிகளுக்கு 5219-ஐ பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்.


இந்தப்படத்தில் செட் போட்டு எடுத்த காட்சிகள் பெரும்பாலும் இங்கிலாந்தில் 'Cardington'னில் உள்ள ஒரு முன்னாள் விமானக்கட்டுமானத் தளத்தில் எடுத்துள்ளார்கள். 'நோலனின்' முந்தைய இரண்டு படங்களும் (Batman Begines, Dark Knight) இங்கேதான் செட் போடப்பட்டிருக்கிறது.


ஜப்பானில் 92 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். 'los angeles'-இல் மூன்று வாரம், அந்த முதல் தள கனவில் வரும் மழைச் சண்டையை எடுத்திருக்கிறார்கள். மொரோக்கோ, பாரிஸ், லண்டன், அமெரிக்கா, ஜப்பான் என்று ஆறு நாடுகளில் படம் பிடித்திருக்கிறார்கள்.




ஒரு ஹோட்டல் Bar செட்டை 30 degrees சாய்த்துப் போட்டிருக்கிறார்கள். அந்த லிஃப்டை படுக்கை வாட்டில் செட் போட்டிருக்கிறார்கள். புவி ஈர்ப்புவிசையற்ற ஹோட்டல் வராண்டாவில் (Hotel hallway) நடக்கும் அந்த சண்டைக் காட்சிக்காக, இரண்டு விதமான செட் போட்டிருக்கிறார்கள். ஒன்று மொத்த 'Hotel hallway'-வும் 'Vertically' 360 டிகிரி சுற்றும் படியாகவும். மற்றொன்று ''Vertically' நிறுத்தப்பட்டு அதில் நடிகர்களைக் கம்பிகளால் கட்டித்தொங்கச்செய்து படமாக்கியிருக்கிறார்கள். பின்பு 'Post'-இல் கம்பிகளை எடுத்துவிடுவது. இந்த காட்சிகளுக்கு 'technocrane' பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 






இதைப்பற்றி 'நோலன்' என்ன சொல்கிறார் என்றால், குறிப்பாக இந்த மாதிரியான காட்சிகள் 'CG'-இல் உருவாக்கப்படும். ஆனால் நாங்கள் எதையும் முடிந்தளவிற்கு கேமராவிலேயே கொண்டு வர முயன்றோம். அது சிறப்பாகவும் வந்திருக்கிறது என்கிறார். Special Effects Supervisor Chris Corbould இல்லாமல் இந்தக் காட்சிகளை எங்களால் எடுத்திருக்கமுடியாது என்றும் கூறுகிறார்.






அதேபோல் கிளைமாக்ஸில் வரும் அந்த பனிமலை சண்டைக்காட்சியை எடுக்க சிறப்பு ஒளிப்பதிவாளர் 'Chris Patterson'-ஐ நடிகர்களோடு பனியில் கையில் கேமராவோடு சறுக்கி சென்று படம் பிடிக்க செய்திருக்கிறார்கள். அதேபோல் அந்த ஷாட்டுகளை ஃபோக்கஸ் செய்ய 'focus puller'-வும் ஒளிப்பதிவாளரின் பின்னால் பனியில் சறுக்கிக்கொண்டு சென்றிருக்கிறார். கனடாவில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சிக்காக 669 பனிமலை ஏறுபவர்களைப் பயன்படுத்திருக்கிறார்கள்.








இந்த காட்சியில் உபயோகித்த கருவிகள்:
  
Beaucam VistaVision camera for helicopter shots.
PanArri 235 for action sports. 200'2c magazines. lens 28mm,35mm or 75mm panavision G-Series Anamorphic Prime. 
Primo 48-550mm and 270-840mm zoom lenses were used to capture some shots from a distance.
Camera supported with lightweight rig - Red Rock Micro that includes a (Preston wireless) FIZ remote follow focus.
Scorpio gyrostabilized head-used to capture some high-speed work and tracking shots in deep snow.




கடைசியாக 'நோலன்' சொல்லுவது என்னவென்றால் "fundamentally, I wanted every shot to be moving"


இப்படி இந்தப் படத்தின் உருவாக்கத்தைப்பற்றி நிறைய பேசிக்கொண்டே போகலாம். ஆகவே, இப்போதைக்கு இங்கே முடித்துக்கொள்வோம். வேண்டுமானால் நம்மால் முடிந்த இன்னொன்றைச் செய்யலாம்...


"Christopher Nolan.. Wally Pfister..! வாழ்க..வாழ்க!!"



கருத்துகள்

  1. என்னங்க.. இவ்ளோ டீடெயொலா க்ப்ழுத்திப் போட்டு இருக்கிங்க...

    நல்லாத்தான் இருக்கு,,

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பருக்கு,
    நலமா. இந்த படத்தின் எல்லா விமர்சனங்களையும் பலமுறை படித்தேன். திரு.ஜெய் மிக அருமையாக எழுதியிருந்தார். உஙகள் புள்ளிவிபரம் பிரமிக்க் வைக்கிற்து.உங்கள் தேடல் வாழ்க. D.I படத்தில்பயன்படுத்தப் படவில்லை.எஙகள் படப்பிடிப்பில் ஒரு நாள் வெளிச்சமில்லாமலிருந்த போது காத்திருக்க வேண்டாம் எடுங்கள் D.I யில் பார்த்துக் கொள்ள்லாம் என்று தயாரிப்பு நிர்வாகியில் கடைசி ஆள் சொன்னார்.அந்த அளவு அது சினிமாவை ஆக்கிரமித்திருக்கிற்து. நோலன் அதை தவிர்த்தது ஒரு முக்கிய விசயமாகப் படுகிறது. என்ன படம் அடுத்து நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. நன்றி Jaganathan சார்..

    நலம், தாங்கள் நலமா? படம் முடிந்துவிட்டதா?

    அடுத்தப்படம் விரைவில் அறிவிப்பு வரும். எனக்கே சரியாக தெரியவில்லை, எது முதலில் ஆரம்பிக்கும் என்று.

    பதிலளிநீக்கு
  4. பின்னியிருக்கீங்க விஜய்... தகவல்கள் எல்லாம் சூப்பர்.. போன மூணு படத்துலயும் ஆஸ்கர் நாமினேஷன் மட்டும் வாங்கின Wally Pfister இப்ப விருதும் வாங்குவாருன்னு எதிர்பார்க்கிறேன்...

    ஒளிப்பதிவைப் பொருத்தவரை என்னுடைய ஃபேவரிட் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்-தான்... உங்களுக்கும் அது பிடித்திருந்தால், அது பற்றியும் ஒரு பதிவு எழுதுங்கள்... :)

    பதிலளிநீக்கு
  5. தங்களின் படைப்புகளை ஒரு நண்பர் மூலமாக புத்தகமாக வெளியிடும் எண்ணம் எனக்கு உண்டு. உஙளுக்கு விருப்பமானால் பேசுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான டெக்னிகல் விசயங்கள் நிறைந்த விமர்சனம்.பாலோயராகிட்டேன்.அறிமுகப்படுத்திய ஜெய்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான பார்வை.

    உங்கள் பதிவுகளின் சிறப்பே நீங்கள் அளிக்கும் நுணுக்கமான‌ தொழில்நுட்ப விபரங்களே. என் போன்ற சினிமா ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் பல விபரங்களைத் தருகிறீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தூள் மச்சான்
    உனது வலைப்பூ சினிமா ப்ரியர்களுக்கு ஒரு வரபிரசாதம். விரைவில் “விகடனில்” உன் வலைப்பூ பதிவாகும் என நம்புகிறேன்.

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. நன்றி நண்பர்களே..

    Jaganathan சார்,நன்றி. புத்தகமாக கொண்டுவருவது பற்றி பேசுவோம். அதற்கு முன்னால் உறுப்படியாய் எதாவது செய்துவிடுவோம் என்பதுதான் என் நோக்கம்.

    ஜெய் - எனக்கும் 'ஷிண்ட்லர்லிஸ்ட்' பிடித்தமான படம்தான். அதன் ஒளிப்பதிவாளர் 'Janusz Kaminski' மிக நுட்பமானவர். இந்தப்படத்திற்கு பிறகு வந்த 'Steven Spielberg'-இன் எல்லாப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர் இவர்தான். நான் ரசிக்கும் ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். கண்டிப்பா இவரின் ஒளிப்பதிவைப்பற்றி ஒரு பதிவு போடலாம்.

    நன்றி மயில்ராவணன்..

    நன்றி சரவணக்குமார்.. இதில் ஒன்றும் சிரமமே இல்லை. நான் தேடிப்படிக்கும் விஷயங்களை தமிழில் பதிவாகப் போடுகிறேன். இந்த கட்டுரைக்கு தேவையான தகவல்கள் 'American Cinematographer Magazine'-லிருந்து கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  10. மிக நுணுக்கமான காமிரா விபரங்கள், ஒளிப்பதிவு விஷயங்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  11. yenga sir irunthiga ivlo varushama cinema va uira nesikra enaku english knolge kammi tamil a oru book cinematography book kidaikatha nu eangitu iruntha enaku unga katturaiya padicha udaney our thanambikai vandhudichi naan nichyam jaipean itha naan en nanbargal elorkum cd pottu koduthu padika sonean yellorum magizhchi la thigaichitanga naan ungaluku nandri kadan patrukean sir ungaloda aramba katurai enaku kidaikala neenga thayavu koornthu enakaga antha notes mail pana mudiuma ungala miga thazhmya ketukrean neenga kodutha ena mathri yengitruka matha assistan cameraman nanbargaluku koduthu uthavalamnu irukean sir plz

    பதிலளிநீக்கு
  12. ஜாக்கி சேகரின் படைப்பை திருடியதற்கு நீங்கள் ஏன் ஒன்றுமே கருத்து சொல்லவில்லை,அவர் உங்களுக்காக எவ்வளவு சிபாரிசுகளும்,தியாகங்களும் செய்தார்,அதை நினைத்து பார்த்து நீங்கள் அவருக்கு வந்து ஆறுதலும் கருத்தும் சொல்ல்வேண்டுகிறேன் சார்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி kummiyadi..நான் ஜாக்கியின் பதிவை இரண்டு நாட்களாக பார்க்கவில்லை. என் கவணத்திற்கு கொண்டுவந்ததிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நல்ல பதிவு சார்.. டெக்னிக்கல் விசயங்களை பகிர்ந்தமைகு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  15. நன்றாகவே பாடம் எடுக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. ரொம்ப அருமையான படம் விஜய் இது வரை 4 முறை பார்துவிடைன் அதுவே புரிய கஷ்டமா இருக்குது இன்னும் ஒரு 4 முறை பார்க வேண்டும். உங்கள் எழுது நடை அருமை படிக்கும் போது படம் பார்க்கும் உனைர்வு இருக்கிறது மிகவும் நன்றி .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...