முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துணைக் கருவிகள்: Accessories

எல்லா துறைகளிலும் முக்கிய கருவிகளுக்குத் துணையாக சில துணைக்கருவிகள் இருக்கின்றன. சில சமயங்களில் இந்தத் துணைக்கருவிகள் அத்தியாவசிய கருவிகளாகின்றன. அவை இல்லாமல் செயல்பட முடியும் என்றாலும், அவற்றின் தேவை தவிர்க்க முடியாததாகிறது. அப்படி படப்பிடிப்பின் போது 'கேமராவோடு' சம்பந்தப்பட்ட சில துணைக்கருவிகளின் அறிமுகம் இங்கே.




'மேட் பாக்ஸ்'(Matte Box)

இது லென்ஸின் முன்புறம் இணைக்கப்படும். இதன் மூலம் லென்ஸில் 'கிளாரோ' (Glare) 'ஃபிளேரோ'(Lens Flare) வராமல் தடுக்க முடியும். இது 'Still Camera' லென்ஸில் இருக்கும் 'லென்ஸ் ஹூட்'(Lens Hood)-ஐப் போன்றதுதான்.






இதன் பக்கங்ளில் 'French flags' எனப்படும் தகடுகள் இணைக்கப்பட்டிருக்கும், பக்கவாட்டில் இருந்து வரும் கிளேரைத் தடுக்க. அதேபோல் இதில் 'ஃபில்டர்ஸ்' (Filters) பொருத்தத் தேவையான அமைப்பும் இருக்கும்.





சில 'மேட் பாக்ஸ்களில்' கேமராவோடு பொருத்த, வசதிகள் இருக்கும். சிறிய 'மேட் பாக்ஸ்களை' நேரடியாக லென்ஸிலேயே பொருத்திவிடலாம்.  


'ஃபாலோ ஃபோக்கஸ்'(Follow focus)

இந்த கருவி லென்ஸோடு இணைக்கப்படும். சரியாக 'ஃபோக்கஸ்' செய்ய உதவும். இதில் இரண்டு 'சக்கரங்கள்' இருக்கும், ஒருமுனையில் 'பற்சக்கரமும்' மறுபுறம் கையால் சுற்றுவதிற்கு ஏதுவான சக்கரமும் இருக்கும். இந்த இரண்டு சக்கரங்களும் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது நாம் கைச்சக்கரத்தை சுற்றும்போது பற்சக்கரமும் சுற்றி அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் லென்ஸின் 'ஃபோக்கஸை' மாற்றும்.





அதாவது நேரடியாக லென்ஸில் ஃபோக்கஸ் மாற்றுவதைவிட இந்த கருவியைக்கொண்டு செய்யும் போது சரியாக, நேர்த்தியாக செய்யமுடியும். இதனால் இந்த கருவி ஒரு முக்கியமான கருவியாகிறது.


இந்த கருவியில் இரண்டுவகை உண்டு. ஒன்று கையால் இயக்குவது. அதாவது இரண்டுசக்கரங்களில் ஒன்றை நாம் கையால் திருப்ப, பற்சக்கரம் திரும்பும்.







இரண்டாது 'மோட்டாரின்' (Motor) துணைக்கொண்டு இயக்குவது. அதாவது லென்ஸோடு இணைக்கப்பட்டிருக்கும் பற்சக்கரத்தோடு சிறிய மோட்டார் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மோட்டாரை இயக்க ஒரு கட்டுப்பாட்டுக்கருவி இருக்கிறது, இது 'கேபில்' (Cable) மூலமாகவோ அல்லது 'கம்பியில்லா' (Wireless Follow Focus) கருவியின் மூலமோ இணைக்கப்பட்டிருக்கும். கைக்கருவியை நாம் இயக்க மோட்டார் இயங்கி லென்ஸின் ஃபோக்கஸை மாற்றும். 


இதன் மூலம் ஃபோக்கஸ் செய்பவர்' (Focus Puller) கேமிராவின் அருகிலேயே இருக்கவேண்டும் என்பது இல்லை. கொஞ்சம் தள்ளி நின்று கூட ஃபோக்கஸ் செய்ய முடியும். மேலும் 'steady cam shots', 'Jimi shot' போன்று கேமரா இயக்கத்திலிருக்கும் (Camera Movements) ஷாட்டுகளின் போது இது மிக அவசியமாகிறது.


'சிறிய வீடியோ மானிட்டர்ஸ்' (Video assist)

இந்த கருவியில் சிறிய திரையும் (TV Screen), படங்களைப் பதிவுசெய்ய கூடிய 'Tape' அமைப்பும் இருக்கும். இந்த கருவியை கேமராவோடு 'கேபில்' மூலம் இணைத்துவிடுவதன் மூலம் கேமராவில் பதிவாகும் காட்சியின் வீடியோ பிரதியைப் பார்க்கலாம். இது கேமராவில் பதிவாகும் காட்சியின் தரத்துடன் (Resolution) இருக்காது, நாம் பார்ப்பதிற்கான 'Low Resolution  பிம்பமே அது. இதை நாம் 'HD' அல்லது 'DV' கேசட்டில் பதிவு செய்துகொள்ளலாம். 





வழக்கமாக கேமராவோடு பெரிய திரை (Monitor or TV) மற்றும் 'VHS Cassette Recorder or DVD Recorder' இணைக்கப்பட்டிருக்கும். சில சமயங்கள் இந்த பெரிய திரையை உபயோகிக்க இடமோ, சவுகரியமோ இருக்காது, மேலும் இயக்கத்திலிருக்கும் ஷாட்டுகளின் போதும் இந்த சிறிய திரைக் கருவி உபயோகிக்கப்படுகிறது. 







இப்போது 'Hard Disc'-இல் சேமிக்கும் கருவியும், கேமராவோடு 'Wireless' தொழில்நுட்பத்தில் இணைக்கக் கூடிய திரைக்கருவிகளும் வந்துவிட்டன.


அதேபோல் கேமராவின் மீதே பொருத்தக்கூடிய 'Monitor'-உம் உண்டு. இதன் மூலம் 'ஃபோக்கஸ்' செய்பவர் கேமராவில் பதிவாகும் பிம்பத்தை பார்த்துக்கொள்ள முடிகிறது. 





'ஸோல்டர் பேட்' (Shoulder Pad)

இது கேமராவின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டு கேமராவை நமது தோள்களில் வைத்து படம்பிடிக்கப் பயன்படுகிறது. கேமராவை அப்படியே தோளில் வைப்பதற்கும், இந்தக் கருவி இணைக்கப்பட்டு பிறகு வைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கேமரா சரியாக தோளில் பொருந்தும், கேமராவை நாம் சரியாக பிடித்து இயக்குவதிற்கு மிக வசதியாகவும் இருக்கும்.







கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,