டெலிசினி என்னும் இந்தத் தொழில்நுட்பம், நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. திரைப்படங்களை வீடியோவாக மாற்றி தொலைக்காட்சி பெட்டி,கணினி திரை ஆகியவற்றில் பார்க்கப் பயன்படுகிறது. 1950-களிருந்து டெலிசினி பயன்பாடு இப்படியாக இருந்தது. பின்பு 1990க்கு பிறகு 'ஆவிட்' (Avid) என்னும் படதொகுப்பு கருவியும் அதைச்சார்ந்த தொழில்நுட்பமும் வந்தபோது இந்த டெலிசினி தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடைந்தது.
இப்போது டெலிசினி தொழில்நுட்பம் திரைப்பட உருவாக்கத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. டெலிசினி செய்யப்படாமல் எந்தப்படமும் இன்று படதொகுப்பு செய்யப்படுவதில்லை. டெலிசினியோடு சம்பந்தப்படாமல் எந்தப் படமும் உருவாகிவிட முடியாது என்பது நிதர்சனம். படத்தொகுப்புக்காக, DVD-க்காக, தொலைக்காட்சிக்காக மட்டுமல்லாமல் திரையரங்கில் திரையிடலுக்காகவும் இன்று டெலிசினி தொழில்நுட்பம் பயன்படுகிறது. அதனால் 'டெலிசினி' சார்ந்த தொழில்நுட்பத்தை நாம் கொஞ்சமாவது அறிந்து கொள்ள வேண்டும். அதைச் செய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.
டெலிசினியின் ஆதார தொழில்நுட்பம்:
படச்சுருளில் (Film) இருக்கும் பிம்பங்களை வீடியோ (Video) வடிவத்திற்கு மாற்றுவது என்பதுதான் இதன் ஆதார தொழில்நுட்பம். ஏனெனில் அப்போதுதானே நாம் அதை தொலைக்காட்சிப் பெட்டியிலோ அல்லது கணினியிலோ பார்க்க முடியும்?. இந்த தொழில்நுட்பம் முதலில் உருவாவதற்கு காரணமே, படங்களை, காட்சிகளை தொலைக்காட்சிப்பெட்டியில் பார்ப்பதற்குதான். 'Telecine' என்கிற வார்த்தையே ' Television' மற்றும் 'Cinema' என்ற இரண்டு வார்த்தைகளிலிருந்து வந்ததுதான்.
அடுத்து திரைப்பட படத்தொகுப்பில் இது எங்கே உதவுகிறது என்று பார்ப்போம். பதிவு செய்யப்பட்ட படச்சுருளை (Exposed Film) 'லேபில்'(Lab) 'லெவலப்' (Develop) செய்த பிறகு 400அடிகளாக (400ft can) இருக்கும் படச்சுருளை 2000 அடி(1 Reel) படச்சுருளாக ஒன்றிணைக்கிறார்கள். இந்த 'ரீல்களுக்கு' (Reel) எண் கொடுக்கப்படுகிறது, மற்றும் அதன் 'அடி'(ft) சார்ந்த அளவீடுகளையும் குறித்துக்கொள்கிறார்கள். படச்சுருளில் ஒவ்வொரு 'frame'-க்கும், 'அடி'(ft)க்கும் குறியீடுகள் உண்டு. இது படச்சுருள் தயாரிக்கும் போதே கொடுக்கப்பட்டுவிடுகிறது. இந்த குறியீடுகள் குறிப்பிட்ட 'frame'-க்கான அடையாளம் அல்லது விலாசம் போன்றது.
பொதுவாக திரைப்படம் என்பது நொடிக்கு 24 பிம்பங்கள் (24f/s- frames per second) என்ற தத்துவதில் இயக்குவது. அதாவது ஒவ்வொரு நொடியிலும் உங்கள் கண்முன்னே 24 பிம்பங்கள் காட்டப்படுகிறது, அந்த பிம்பங்கள் ஒன்றினைந்து உங்களுக்கு அது ஒரு இயங்கும் காட்சியாக தெரிகிறது. அந்த தொழில்நுட்பத்தை இங்கே விளக்கத் துவங்கினால் இந்த கட்டுரையின் நோக்கம் திசைமாறிவிடும், அதனால் அதை வேறு கட்டுரையில் பார்க்கலாம். இங்கே நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டிய 'திரைப்படம் என்பது நொடிக்கு 24 பிம்பங்கள் என்ற கணக்கில் இயக்குவது’ என்பதைத்தான்.
ஆனால் வீடியோ பிம்பங்கள் அல்லது தொலைக்காட்சி பிம்பங்கள் நொடிக்கு 25 பிம்பங்கள்(PAL), நொடிக்கு 30 பிம்பங்கள்(NTSC) என்ற கணக்கில் இயங்குவது. இதை விளக்க நான் உங்களுக்கு PAL, NTSC, SECAM போன்ற தொழில்நுட்பங்களையும், நம் நாட்டில், வெளிநாட்டில் பயன்பாட்டில் இருக்கும் மின்சாரம் சார்ந்த விளக்கங்களையும் கொடுக்க வேண்டியதாக இருக்கும். இதையும் வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். இங்கே நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது 'வீடியோ பிம்பங்கள் என்பது நம் நாட்டில் நொடிக்கு 25 பிம்பங்கள் (PAL-25 f/s) என்ற முறையில் இயங்குகிறது' என்பதைத்தான்.
(நம்முடைய வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டி,DVD Player என எல்லாம் நொடிக்கு 25 பிம்பங்கள் என்ற கணக்கில்தான் இயங்கிறது. நம் நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் இந்த தொழில்நுட்பத்தை 'PAL System' என்கிறார்கள். இதுவே அமெரிக்கா போன்ற நாட்டிலிருக்கும் தொழில்நுட்பதை 'NTSC System' என்கிறார்கள். இந்த தொழில்நுட்பம் சார்ந்துதான் 'DVD'-க்கள் கூட வெளியிடப்படுகிறது. இதை நீங்கள் 'DVD' வாங்கும்போது மேற்புற அட்டையில் குறிப்பிட்டிருப்பதை காணலாம்.)
சரி, இந்த டெலிசினியில் என்ன செய்கிறார்கள்? படச்சுருளில் நொடிக்கு 24 frames என்ற கணக்கில் இருக்கும் பிம்பங்களை, நொடிக்கு 25 frames என்ற கணக்கில் வீடியோ பிம்பங்களாக மாற்றி கொடுக்கிறார்கள். மேலும் படச்சுருளில் பதியபட்டிருக்கும் ஒவ்வொரு frame-க்கான குறியீடுகளையும் கணினிக்கு ஏற்ற தகவல்களாக (Data) மாற்றிக் கொடுக்கிறார்கள். வீடியோவை 'Tape' வடிவத்தில் கொடுக்கிறார்கள். Tape-ல் பதியப்படும்போது அதைச்சார்ந்து 'Time-code' என்ற நேரம் சார்ந்த அளவீடும் உருவாக்கப்படுகிறது. இந்த 'Time-code' ஆனது tape-ல் குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் பிம்பத்தின் அடையாளமாக இருக்கிறது.
வீடியோ பிம்பங்களை கணினியில் ஏற்றும்போதே அதோடு சார்ந்த 'Data'-வையும் ஏற்றிவிடுகிறார்கள். அதாவது இப்போது ஒவ்வொரு frame-க்கும் அடையாளம் உண்டு.
பின்பு படத்தொகுப்பு செய்யப்படுகிறது. தேவையான தேவையற்ற காட்சிகளை/ பிம்பங்களை வைத்தோ அல்லது நீக்கியோ படத்தொகுப்பு நடைபெறுகிறது. படத்தொகுப்பு நிறைவடையும் போது பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு பிம்பத்தைப் பற்றிய தகவலும் கணினியில் இருக்கும். இந்த தகவலை 'EDL' (Edit Decision List) என்கிறார்கள். இந்த 'EDL' லிஸ்டில் எந்த 'Reel'-இல் எந்த பகுதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் இருக்கும். அதைக்கொண்டு குறிப்பிட்ட 'Reel'-லிருந்து பயன்படுத்தப்பட்ட படச்சுருள் பகுதியை வெட்டி எடுத்து (Negative Cutting), அதை படத்தொகுப்பு செய்த வரிசையில் ஒட்டி ஒன்றிணைத்து ஒரு முழுப் படத்திற்கான 'பிச்சர் நெகட்டிவை' (Picture Negative) உருவாக்குகிறார்கள்.
'D.I' முறையில் படத்தைத் தயார்செய்யும் போது, இந்த 'EDL' லிஸ்டை அப்படியே 'D.I'-க்கான கணினியில் ஏற்றிவிடுகிறார்கள். அந்தக் கணினி, அதோடு இணைக்கப்பட்ட 'ஸ்கேனர்'(Scanner) கருவியின் துணை கொண்டு அந்த லிஸ்டில் குறிக்கப்பட்டிருக்கும் உபயோகப்படுத்தப்பட்ட ஷாட்டுகளை மட்டும் 'ஆதார நெகடிவிலிருந்து' (Original Negative) அப்படியே முழுமையாக 'ஸ்கேன்'(Scan) செய்து எடுத்துவிடுகிறது. இப்படி ஸ்கேன் செய்த பிம்பங்கள், டெலிசினி செய்யும்போது கிடைக்கும் வீடியோவைப்போல் குறைந்த தரத்தில்(Low Resolution 576i50) இல்லாமல் அதிக தரத்தில்(High Resolution-2K/4K) இருக்கும். இந்த பிம்பங்களை எடிட் செய்த வரிசைப்படி கணினியில் அடுக்கி, பின்பு கணினியிலேயே 'color correction' செய்கிறார்கள். இப்படி 'color correction' செய்யப்பட்ட பிம்பங்களை மற்றொரு கருவியான 'நெகடிவ் ரெக்கார்டர்' (Negative Recorder)-ஐக் கொண்டு மீண்டும் படச்சுருளில் பதிகிறார்கள். இதற்கென தனியே சிறப்பு நெகடிவ் (RDI) இருக்கிறது. இப்படிப் புதிதாக உருவாக்கப்பட்ட நெகடிவ்தான் திரைப்படம் பிரிண்ட் போட தேவையான 'Picture Negative'-வாக பயன்படுத்தப்படுகிறது. இங்கே 'Negative Cutting' தேவையில்லை.
டெலிசினிக்கும் 'D.I' scanning-க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு 35mm frame என்பது 2048 x 1556 pixels in 2K (நீளத்தையும், உயரத்தையும் புள்ளிகளால் குறிப்பது). டெலிசினி செய்யும் போது இதை 720 X 576 pixels-ஆகக் குறைத்து வீடியோவாக மாற்றுகிறார்கள்.
ஆனால் D.I.யில் Scan செய்யும்போது 2048 x 1556 pixels (2K) அளவிலேயே டிஜிட்டலாக மாற்றப்படுகிறது. அதனால் மீண்டும் ஃபிலிமாக மாற்றும் போது எந்தவித குறைபாடும் வருவதில்லை. படமும் தெளிவாக இருக்கும்.
குறிப்பு: ஒரு 35mm படச்சுருளில் இருக்கும் பிம்பமானது மிகுந்த 'Resolution' கொண்டது, அதை நம் தேவைகேற்ப 'Scan' செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது டெலிசினியில் 720X576 pixels-ஆகவோ அல்லது அதைவிட குறைந்த 'பிக்சல் ரேசியோவிலேயோ', 2K Scanning-இல் 2048X1556 pixels அளவிலும் 4K Scanning-இல் 4096X3112 pixels என நம் தேவை சார்ந்து அதிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் 2K Resolution என்பது ஒரு திரைப்படத்தைத் திரையரங்கில் திரையிடப் போதுமான அளவு என்பதினால், ஏறக்குறைய எல்லா படங்களும் 2K அளவிலேயே scan செய்யப்படுகின்றன. அதனால் Pixel Ratio-ஐப் பற்றி குறிப்பிடும்போது 2K அளவிலேயே குறிப்பிடுகிறார்கள்.
டெலிசினி எங்கேயெல்லாம் பயன்படுகிறது?
- படச்சுருளாக (Film) இருக்கும் படத்தை வீடியோவாக (Video) மாற்றி தொலைக்காட்சி (TV), ஒளிநாடா (VHS Tape), DVD, VCD ஆகியவற்றில் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது.
- முக்கியமாக திரைப்பட உருவாக்கத்தில் 'ஆவிட்' (Non-linear Editing) தொழில்நுட்பதைப் பயன்படுத்தி படதொகுப்பு செய்ய கணினியில் ஏற்றும் விதத்தில் 'டிஜிட்டல் வீடியோவாக' படச்சுருளை மாற்ற பயன்படுகிறது.
- படத்தொகுப்பெல்லாம் முடிந்தபிறகு, இன்றைக்கு அதிகமாக நடைமுறையில் இருக்கும் 'D.I' தொழில்நுட்ப முறையில், 'ஸ்கேனிங்' (Scanning) செய்ய பயன்படுகிறது.
- இன்றைக்கு 'டிஜிட்டல் திரையிடல்' (Digital Projection) என்கிற முறை நடைமுறைக்கு வந்துவிட்டதால், அத்தகைய டிஜிட்டல் திரையரங்குகளுக்கு (Digital Cinema) 'டிஜிட்டல்' வடிவத்தில் திரைப்படத்தை அனுப்பப் பயன்படுகிறது. (D.I செய்யும் படங்களை அப்படியே டிஜிட்டல் வடிவத்தில் கொடுத்துவிடுகிறார்கள். D.I செய்யாத படங்களை 2K அளவில் 'டெலிசினி' செய்து கொடுக்கிறார்கள்)
'டிஜிட்டல் திரையிடல்' என்பது இன்று பரவலாக இருக்கும் 'QUBE', 'UFO' மற்றும் 'RDX' திரையிடல் முறையைக் குறிப்பதாகும். நீங்கள் இதைத் திரையரங்குகளில் படம் துவங்கும் முன்பாக வரும் விளம்பரத்தில் பார்த்திருப்பீர்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக