முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

The Girl in the Picture : வியட்நாம் சிறுமி

ஜூன் 8, 1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது இப்படம் எடுக்கப்பட்டது. தன் கிராமத்தின் மீது போடப்பட்ட குண்டுகளால் எரிக்கப்பட்டு தீக்காயங்களோடு ஓடிவரும் இந்தப் பெண்ணின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அந்த ஆண்டுக்கான 'புலிட்சார் விருது' பெற்ற இப்படத்தை எடுத்தவர் 'Nick Ut' என்னும் வியட்நாமியப் புகைப்படக்காரர். வியட்நாம் போர்: நவம்பர் 1,1955 ஆம் ஆண்டு துவங்கிய இப்போர் ஏப்ரல் 30,1975-இல் முடிவுக்கு வந்தது. கம்யூனிஸ்ட் ஆதரவு வடக்கு வியட்நாமுக்கும் தெற்கு வியட்நாமுக்கும் இடையே இப்போர் நடந்தது. தெற்கு வியட்நாமிற்கு வட அமெரிக்கா போன்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாடுகள் துணை புரிந்தன என்பதனால் இது ஒருவகையில் பொதுவுடமைக்கு எதிரான போராக பார்க்கப்பட்டது/நடத்தப்பட்டது. அதனால் தெற்கு வியட்நாமில் உருவான 'வியட்காங்' (Viet Cong) என்னும் கொரில்லா படை, (முறையான படைப்பிரிவும், அரசியல் தலைவர்களும் அதற்கு உண்டு) தெற்கு வியட்நாம் அரசாங்கத்தையும் அதன் ஆதரவு வட அமெரிக்கப் படைகளையும் எதிர்த்தது. இரண்டு புறமும் பல தேசங்கள் பங்கு பெற்றன. பொதுவுடமை கருத்தாக்கத்திற்கு எதிரான அணியில்...

இருபதாம் நூற்றாண்டின் மோனலிஸா

'ஆப்கான் பெண்' (Afghan Girl) என்று பெயரிடப்பட்ட இந்தப் பெண்ணின் புகைப்படம் ஜூன்,1985-ஆம் ஆண்டின் 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' (National Geographic) இதழில் அட்டைப் படமாக வெளி வந்தது. இப்படம் 1980-இல் ஆப்கானிஸ்தானின் நிலை மற்றும் உலக முழுவதுமிருக்கும் அகதிகளின் நிலையை வெளிப்படுத்துவதாக அறியப்பட்டது. இன்றுவரை உலகில் 'மிகவும் அறியப்பட்ட' புகைப்படமாக இது இருக்கிறது. அவளின் கடல் பச்சை வண்ணக் கண்களும் அது சொன்னச் செய்தியும் உலகத்தை கவனிக்க வைத்தது. அந்த கண்களுக்குப் பின்னே உறைந்து கிடந்த துயரம் அன்றைய ஆப்கானின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.  'Amnesty International'-ஆல் அதிகமுறை அவர்களின் சுவரொட்டிகளிலும் காலண்டரிலும் அச்சிடப்பட்டது.  "ஆப்கன் மோனலிஸா"  (the Afghan Mona Lisa) என்று அழைக்கப்பட்ட இப்படத்தை எடுத்தவர் 'ஸ்டீவ் மெக்கரி' (Steve McCurry) என்ற புகழ்பெற்ற 'நேஷ்னல் ஜியோக்ராஃபிக்' புகைப்படக்காரர். யாரிந்த 'ஆப்கான்' பெண்? உண்மையில் அப்படத்தை எடுத்த ஸ்டீவ் மெக்கரிக்கேக் கூடத் தெரியவில்லை. அவர் 1984- டிசம்பரில் ஆப...

மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள். அப்படி பல புகைப்படங்கள், தான் சொல்ல வந்தக் கருத்தை முழுமையாக உலகத்தாருக்குக் கொண்டு சேர்த்திருக்கின்றன. அவ்வகையில் புகழ் பெற்ற சில புகைப்படங்களையும், அதன் முன்/பின் விவரங்களையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். உலகப்புகழ் பெற்றப் பல படங்களிலிருந்து சிலவற்றை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளேன். அவை கடந்த கால நினைவுகள் மட்டுமல்ல, நிகழ்காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. இப்புகைப்படங்கள் மானுடர்களுக்கான செய்திகளைத் தாங்கிக் கொண்டுள்ளன. மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்: Kevin Carter’s most famous photo Source: The Unsolicited Opinion 1994-ஆம் ஆண்டுக்கான 'புலிட்சார் விருது' (Pulitzer Prize) பெற்ற இப்படம் 1993 ஆம் வருடம் சூடானில் எடுக்கப்பட்டது. சூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக் கணக்கானவர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருந்தது. ஐ.நா சபையின் மூலம் உணவு பொருட்கள் நாடு முழுவதும் பரவலாக வழங்கப்பட்டன. அப்படியான ஒரு உணவு முகாமை நோக்கித் தவழ்ந்து சென்ற ஒரு பெண் குழந்தையை...

கேட்பது உயிர்ப் பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி!!

திரு.பேரறிவாளன் - நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்_ Thirumurugan Gandhi அவர்களுக்கு நன்றி 1.   தூக்குக் கொட்டடியிலிருந்து நான்   கேட்பது   உயிர்ப் பிச்சையல்ல !  மறுக்கப் பட்ட நீதி !! பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே , வணக்கம்.  நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்குத் தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன்  என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன். தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனித நேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின்  அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என்மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது  என்பதைத் தங்களுக்கு தெளி...

தப்பிப் பிழைத்தக் கலைஞன்

1939ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அது. இரண்டாம் உலகப்போரின் ஆரம்பக் காலம். போலந்தின் தலைநகரான வார்சாவில் (Warsaw) ஒலிபரப்பில் இருந்த போலந்து நாட்டின் வானொலி ஒலிபரப்பு இடையில் நிறுத்தப்பட்டது. நிலையம் இழுத்து மூடப்பட்டது. போலந்தின் மேல் போர் தொடுத்த ஜெர்மனியின் இராணுவம் நகருக்குள் நுழைந்திருந்ததும் வானொலி நிலையத்தின் மீது குண்டு போட்டதும் அதற்கு காரணம். போலந்து வானொலி (Polish Radio) தன் ஒலிபரப்பை இடையில் நிறுத்திய போது, ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது  Chopin’s Nocturne in C sharp minor என்னும் இசைக் கோவை. 'Wladyslaw Szpilman' என்னும் பியனோ இசைக் கலைஞன் அதை அப்போது வாசித்துக் கொண்டிருந்தான். தன் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது ஒருபுறம், சிதறி ஓடும் மக்கள் ஒருபுறம், தன் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் ஒருபுறம் என மொத்தக் கவலைகளையும் சுமந்துகொண்டு வீடு வந்து சேர்கிறான் அவன். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் மற்றும் பெற்றோர்கள் என மொத்தம் ஆறுபேர் கொண்ட குடும்பம் அது. போலந்தில் வசிக்கும் யூதக் குடும்பம். நாஜிக்கள் போலந்துக்குள் நுழைந்ததும் செய்த முதல் வேலை, வார்சாவில் வசித...

180 Degree Rule: திரைப்பட ஆக்கத்தின் ஆதார விதி

180 Degree Rule: ஒரு அறிமுகம். திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளனின் கவனம் சிதரா வண்ணம் கதையோடு ஒன்றியிருக்கச் செய்வதென்பது கடினமான காரியங்களில் ஒன்று. அதற்காக ஒரு படைப்பாளி, பல யுத்திகளைப் பயன்படுத்தி, தான் சொல்லவரும் உணர்ச்சிகளைப் பார்வையாளனுக்கு சிரமமின்றி கொண்டு சேர்க்க முயன்றான்/முயலுகிறான். அப்படி முயற்சிக்கப்பட்டு, பெரும்பயன் தந்த யுத்திகள், பிற்பாடு 'விதிகளாக' (Rules) மாற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. அப்படி திரைப்பட ஆக்கத்தில் பல விதிகள் ஒழுங்கமைக்கப்பட்டு, பயன்பாட்டிலிருக்கிறது. அவ்வகையில் இந்த '180 Degree Rule' என்பது மிக ஆதாரமான விதிகளில் ஒன்று. திரைப்படம், குறும்படம், ஆவணப்படம், பேட்டிகள் என எதுவாகிருந்தாலும் இந்த விதி பயன்படும். ஆகையால் அதை கொஞ்சம் அறிமுகப்படுத்தி வைத்துக்கொள்வது நலம் (நமக்கும் நம் படைப்புக்கும் ). 180 Degree Rule என்பது.. A,B என இரண்டு நடிகர்களை எடுத்துக்கொள்வோம். 'A'-வும் 'B'-யும் எதிரெதிராக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் படம் பிடிக்க கேமராவை, இருவருக்கும் பக்கவாட்டில் சிறிது தூரம் தள்ளி வைக்கிறோம்...

இருளின் இளவரசன் - காட்ஃபாதர் படத்தின் ஒளிப்பதிவாளர் 'கார்டன் வில்லிஸ்'

காட்ஃபாதர் படத்தின் மூன்று பாகங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர் 'கார்டன் வில்லிஸ்' (Gordon Willis). அவரைப்பற்றிய சிறிய அறிமுகம். காட்ஃபாதர் படங்களில் இவர் அமைத்த ஒளியமைப்பு முறை இன்று வரை பேசப்படுகிறது, பின்பற்றப்படுகிறது. 'காட்ஃபாதர் லைட்டிங்' என்றும் அழைக்கப்படுகிறது. ஒளியமைப்பில் பல முறைகள் உள்ளன. 'ஹை கீ' (High Key), 'லோ கீ' (Low Key),' பட்டர்ஃபிளை லைட்டிங்' (Buttery Fly Lighting) ..etc, என்பதில் 'காட்ஃபாதர் லைட்டிங்' (Godfather Lighting) என்பதும் ஒன்று, என கொடாக்கின் (Kodak) ஒரு கையேடு குறிப்பிடுகிறது. காட்ஃபார்தர் படத்தில் இவர் அமைத்த ஒளியமைப்பு எப்படியானது? -ஒளி மேலிருந்து வரும், அந்த ஒளி 'Diffuse' செய்யப்பட்ட 'மென்மையான ஒளியாய்' (soft light) இருக்கும். -நடிகர்களின் கண்களுக்கு 'Eye Light' பயன்படுத்தாமல், 'மார்லன் பிரண்டோ' போன்ற நடிகர்களின் கண்களை இருட்டில் இருக்கும்படி செய்தார். கண்கள் இருட்டில் இருக்கின்றன ('Eye Light' என்பது, நடிகர்களின் கண்களுக்கென தனியாக செய்யப்படும் ஒரு...