முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Girl in the Picture : வியட்நாம் சிறுமி



ஜூன் 8, 1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது இப்படம் எடுக்கப்பட்டது. தன் கிராமத்தின் மீது போடப்பட்ட குண்டுகளால் எரிக்கப்பட்டு தீக்காயங்களோடு ஓடிவரும் இந்தப் பெண்ணின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அந்த ஆண்டுக்கான 'புலிட்சார் விருது' பெற்ற இப்படத்தை எடுத்தவர் 'Nick Ut' என்னும் வியட்நாமியப் புகைப்படக்காரர்.

வியட்நாம் போர்:

நவம்பர் 1,1955 ஆம் ஆண்டு துவங்கிய இப்போர் ஏப்ரல் 30,1975-இல் முடிவுக்கு வந்தது. கம்யூனிஸ்ட் ஆதரவு வடக்கு வியட்நாமுக்கும் தெற்கு வியட்நாமுக்கும் இடையே இப்போர் நடந்தது. தெற்கு வியட்நாமிற்கு வட அமெரிக்கா போன்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாடுகள் துணை புரிந்தன என்பதனால் இது ஒருவகையில் பொதுவுடமைக்கு எதிரான போராக பார்க்கப்பட்டது/நடத்தப்பட்டது. அதனால் தெற்கு வியட்நாமில் உருவான 'வியட்காங்' (Viet Cong) என்னும் கொரில்லா படை, (முறையான படைப்பிரிவும், அரசியல் தலைவர்களும் அதற்கு உண்டு) தெற்கு வியட்நாம் அரசாங்கத்தையும் அதன் ஆதரவு வட அமெரிக்கப் படைகளையும் எதிர்த்தது.

இரண்டு புறமும் பல தேசங்கள் பங்கு பெற்றன. பொதுவுடமை கருத்தாக்கத்திற்கு எதிரான அணியில் 'தெற்கு வியட்நாம், வட அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிலிபைன்ஸ், நியூஸ்லாந்து, தாய்லாந்து' போன்ற நாடுகளும் பொதுவுடமை ஆதர பிரிவில் 'வடக்கு வியட்நாம், மக்கள் குடியரசு சீனா, சோவித்யூனியன் மற்றும் வட கொரியா' போன்ற நாடுகளும் ஆதரவு கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் நடந்த இப்போர் வட அமெரிக்காவின் போர்கள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. வடக்கு/ தெற்கு வியட்நாமிற்கு இடையேயான போரானாலும் இதில் வட அமெரிக்காவின் பங்கு அதிகம். ஒரு வகையில் இது வட அமெரிக்கா தொடுத்த 'பொதுவுடமை சித்தாந்தத்திற்கு' எதிரானப் போர்களில் ஒன்று. போரில் அடிமேல் அடிபட்ட வட அமெரிக்கா, இதைத் தன் மதிப்புக்கு வந்த சவாலாக எடுத்துக் கொண்டது. பெரும் ஆயுதபலம் மற்றும் பணப்பலத்தைப் பிரயோகித்தாலும் இறுதியில் இப்போர் வட அமெரிக்கர்களுக்குத் தோல்வியைக் கொண்டு வந்தது. 1973-இல் வட அமெரிக்கா இப்போரில் இருந்து வெளியேறியது. இன்றுவரை வட அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது என்பது வியட்நாமில் மட்டுமே நடந்த ஒன்று.

பல லட்சம் மக்களைப் பலி கொண்ட இப்போர் 1975-இல் தெற்கு வியட்நாமின் தலைநகரான 'சாய்கான்' (Saigon) வடக்கு வியட்நாம் படையால் பிடிக்கப்பட்டப் பிறகு முடிவுக்கு வந்தது. இரண்டு வியட்நாமுகளும் இணைக்கப்பட்டன.

இப்போர் அதன் உச்சக் கட்டத்தை அடைந்துக்கொண்டிருந்த காலக்கட்டதில் ஜூன் 8, 1972-இல் 'Trang Bang' என்னும் சிறு கிராமத்தின் மீது தெற்கு வியட்நாம் படையால் போடப்பட்ட 'நேபம்' (napalm) குண்டால் துளைக்கப்பட்ட இடிபாடுகளிலிருந்துதான் அந்த ஒன்பது வயதுச் சிறுமி ஓடி வந்தாள்.

அச்சிறுமியின் பெயர் 'Phan Thi Kim Phuc'. அவளோடு அவளுடைய சகோதரர்களும் உறவினர் குழந்தைகளும் ஓடிவருகிறார்கள். குண்டுகளால் உண்டான தீ, அவளின் உடைகளை எரித்து அவளின் தோல்களிலும் பரவி இருந்தது. அவளின் கன்னங்கள் மற்றும் உதடுகள் கூட தீயினால் கருகி இருந்தது.  ஓடி வரும் போது "too hot, too hot" என்று அவள் தாய் மொழியில் கத்திக்கொண்டே வந்தாளாம்.


Nick Ut


அப்போது அங்கே இருந்த புகைப்படக்காரர் 'நிக்' (Nick Ut) அந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கிறார். படைவீரர்கள் அவளுக்குத் தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். அவளது அவயங்கள் தீயினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. புகைப்படக்காரர் நிக் அவளைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு அருகிலிருந்த இராணுவ மருத்துவ முகாமிற்குச் சென்றிருக்கிறார். அங்கே அவளுக்கு முதலுதவி தரப்பட்டு, பதினாலு மாதங்கள் சிகிச்சையில் பதினேழு தையல்கள் போடப்பட்டன.

இதன் இடையே இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வட அமெரிக்காவில் போருக்கு எதிரான பிரச்சாரத்திற்கு இப்படம் பெரிதும் உதவியது. அப்போது வட அமெரிக்காவில் வியட்நாம் போருக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. இது ஒரு தேவையற்ற போர் என்று வட அமெரிக்க மக்கள் கருதினார்கள். வீணாகத் தன் இளைஞர்களை வட அமெரிக்கா பலி இடுகிறது என்ற கருத்தோட்டம் பரவி தேசம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அச்சமயத்தில் வெளியான இப்படம் மிகுந்த கவனத்திற்கு உள்ளானது. அப்போதைய அதிபர் நிக்சன் இது ஒரு சித்தரிக்கப்பட்ட போலி புகைப்படம் என்பதாகக் கூட விவாதித்தாராம்.

சிறுமிக்கு உதவும் படையினர்

ஆனால் இது உண்மையானப் படம்தான். அதைப் பலரும் உறுதி செய்தார்கள். இப்படம் எடுக்கப்பட்ட போது உடனிருந்த மற்ற செய்தியாளர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கூட இதை உறுதி செய்தார்கள். செய்தியாளர்கள் கண் முன்னால் குண்டு வீசுவதற்கான ஆணை இடப்பட்டு அக்கிராமம் குண்டுகளால் துளைக்கப்பட்டதை அவர்கள் பதிவு செய்தார்கள்.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி, பிழைக்க மாட்டாள் என்றுதான் முதலில் மருத்துவர்கள் சொன்னார்களாம். பதினான்கு மாத கால மருத்துவதிற்குப் பிறகு பிழைத்து அவள் தன் கிராமத்திற்குத் திரும்பினாள். அவள் மருத்துவமனையில் இருந்த போதும் அதன் பின் கிராமத்திலும் அவளைச் சென்று பார்த்து வந்திருக்கிறார் புகைப்படக்காரர் நிக். மூன்று வருடங்களுக்கு பின் போர் முடிவடைந்த போது நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மற்றொரு புகைப்படக்காரால் எடுக்கப்பட்டப் படங்கள்

சில வருடங்களுக்கு பிறகு ஒரு ஜெர்மன் பத்திரிக்கையாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அப்பெண் மீண்டும் செய்தி ஆனாள். அதன் பின் வியட்நாம் அரசாங்கம் அவளை 'போரின் அடையாளச் சின்னமாக' பயன்படுத்தத் துவங்கியது. அதனால் அவளது மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவிற்கு படிக்கச் சென்றாள். அங்கே தன் சக மாணவனோடு நட்பு ஏற்பட்டு அவனை திருமணம் செய்துக்கொண்டாள். பிறகு கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.

இடையே பல கூட்டங்களில் கலந்துக்கொண்டு போரின் அவலங்களை உலகத்திற்கு எடுத்துச் சொன்னாள். ஒருமுறை அவளின் இந்த நிலைக்கு காரணமான குண்டு வீச்சை நடத்திய இராணுவ அதிகாரி, அவளைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டார். அவளை அவர் பார்த்த நொடியிலிருந்து தொடர்ந்து தன்னை மன்னிக்குப்படி கேட்டுக்கொண்டே இருந்தாராம். அவள் அவரின் கையை பிடித்து நான் உங்களை மன்னித்துவிட்டேன் என்றுச் சொன்னப் பிறகுதான் அவர் நிம்மதி அடைந்ததாக அவரே சொல்கிறார்.


1997-இல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம். பிறகு பல கிளை நிறுவனங்கள் இணைக்கப்பட்டு இப்போது அது 'Kim Phuc Foundation International' என்றப் பெயரில் இயங்கி வருகிறது.

1997-இல் 'UNESCO Goodwill Ambassador' ஆக நியமிக்கப்பட்ட அவர். பல பட்டங்களை பெற்றுள்ளார்.

அதில்..

'honorary Doctorate of Law from York University'

'Order of Ontario'

'honorary degree in Law from Queen's University in Kingston, Ontario'

'honorary degree of Doctor of Laws from the University of Lethbridge' ஆகியவையும் அடங்கும்.



1999 -இல்
The Girl in the Picture: the Story of the Story of Kim Phuc, the Photograph and the Vietnam War by Denise Chong என்னும் புத்தகம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் விதத்தில் வெளிவந்து புகழ்ப்பெற்றது.

'Haunted a whole generation of Americans and helped turn America's public opinion against the Vietnam War. Today, that picture is still considered by the world as one of the most important images of the 20th century'
'ஒரு தலைமுறையையே உலுக்கிய அந்தப் புகைப்படம் அமெரிக்க மக்களை வியட்நாம் போருக்கு எதிராக ஒன்று திரள உதவியது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமானப் புகைப்படங்களில் ஒன்றாக அது இன்று கருதப்படுகிறது' 

ஏதும் அறிய அந்த ஒன்பது வயதுச் சிறுமியின் மீது படர்ந்த அந்தத் தீ இன்றும் பல இடங்களில் படர்ந்துகொண்டுதான் இருக்கிறது. போரின் கொடூர முகத்திற்கு சாட்சியாக அந்தப் பெண் நம்மோடு வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அதிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.



கருத்துகள்

  1. HYE ARMSTRONG SIR !!! இந்த காலகட்டத்தில ரொம்ப அவசியமான கட்டுரை...

    sir உங்க mailukku ரொம்ப thx.... இவளோ பெரிய இடத்தில இருந்திட்டு என்னோட mailக்கு எல்லாம் response பண்றது ரொம்ப பெரிய விஷயம் sir... thank you so much..... என்ன sir 5cs part six ஓட நிறுத்தீட்டிங்க ???

    பதிலளிநீக்கு
  2. There is a evidence for the Vietnam war and change the nature of the war. There are lot of evidence for the Srilankan war crime. what is the use of that. it wont make any changes the World. Most of the countries are trying to hide the evidence of the Sri Lankan war crimes. but got knows everything and he will punish them

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பர்களே..(ramtirupur,Bharathi Dhas,ஆனந்த்-ஷா)

    பதிலளிநீக்கு
  4. ஆனந்த்-ஷா//என்ன sir 5cs part six ஓட நிறுத்தீட்டிங்க ???// - அடுத்த பாகங்கள் விரைவில்

    பதிலளிநீக்கு
  5. உலகை குலுக்கிய அந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி இறந்திருப்பாள் என்றே நினைத்திருந்தேன்.
    உங்கள் பதிவின் மூலம் அப்பெண்ணின் சரித்திரத்தையே தெரிந்து கொண்டேன்.நன்றி நண்பரே!

    போதி தருமர் பற்றிய உண்மை வரலாற்றையும் எழுதுங்கள்.
    ஏழாம் அறிவில் போதிதருமரின் வரலாற்றை பார்த்து பீதியடைந்து போய் உள்ளேன்.
    உதவுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. வீதியில் நடக்கும் சம்பவம் ஒரு நாள் வீட்டிலும் நடக்கும் அப்போது தான் தமிழனும் திருந்துவான் . . புகைப்படத்தைப் பற்றி மட்டுமே பார்க்காமல் அதன் பிண்ணனியையும் ஆராய்ந்து எழுதுவது நன்றாக உள்ளது. . . . தொடர வாழ்த்துக்கள் அல்ல, வேண்டுகோள். .. . .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...