கடந்த ஜூலை 9ஆம் தேதி சென்னையில் ‘டிஜிடல் கேமரா’ எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடந்து முடிந்தது. டிஜிட்டல் கேமராவின் அடிப்படைத் தொழில்நுட்பத்தை மையமாக வைத்துக்கொண்டோம். இன்று விரவிக்கிடக்கும் பல்வேறு நிறுவனங்களின் பல வகையான கேமராக்களை புரிந்துக்கொள்ளுவதற்கு, அதன் அடிப்படைத்தொழில்நுட்பத்தை புரிந்துக்கொள்ளுவது அவசியம் அல்லவா..? அதைத்தான் இப்பயிற்சிப்பட்டறையில் பகிர்ந்து கொண்டோம்.
டிஜிட்டல் கேமராக்களுக்கும், ஃபிலிம் கேமராக்களுக்குமிடையே இருக்கும் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள், புகைப்படக்கேமராக்களின் அடிப்படைக் கட்டமைப்பில் துவங்கி திரைப்படக்கேமராக்களின் வடிவமைப்பு வரை பார்த்தோம். இன்றைய நவீன டிஜிட்டல் கேமராக்களில் செயல்படும் நுட்பங்களை, அதன் பணிகளை, அவற்றிக்கிடையே இருக்கும் வேற்றுமைகளை, ஒற்றுமைகளைப்பற்றியும் பார்த்தோம். அதற்காக, இன்றைக்கு இத்துறையில் பயன்பாட்டிலிருக்கும் பல்வேறு கேமராக்களை வரவழைத்திருந்தோம். DSLR -இல் துவங்கி Digital Movie Cameras வரை பல கேமராக்களை மாணவர்களின் பார்வைக்கு வைத்திருந்தோம். நாம் கடந்து வந்துவிட்ட ‘Film Camera’ வைப்பற்றி புரிந்துக்கொள்ளுவதற்காக அவ்வகை கேமரா ஒன்றையும் வரவழைத்திருந்தோம்.
வழக்கம் போல, பல்துறை சார்ந்தவர்களும், வெவ்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்தார்கள். பங்கேற்பாளர்கள் கோயம்புத்தூர், டெல்லி, மதுரை போன்ற நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல், இலங்கையிலிருந்தும் வந்திருந்தது மகிழ்வூட்டியது.
Hi,
பதிலளிநீக்குLet me know the workshop details. I would like to know the dates in Dec 2017 or Jan 2018.
Thanks,
Chidam Alagar
நிகழ்ச்சிகள் youtube ல் இருக்கிறதா?
பதிலளிநீக்கு