கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் நாடு முழுவதும் பல்வேறு பயிற்சிப்பட்டறையை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு துறைச்சார்ந்து நடத்தி வருகிறேன். அவ்வகையில் வரும் செவ்வாய் கிழமை (23/04/19) அன்று திருச்சியில் 'சினிமேட்டிக் லைட்டிங் இன் வெட்டிங் போட்டோகிராபி’ என்ற தலைப்பில் 'திருச்சி நிக்கான் டெக்னிக்கல் கிளப்' ஒரு பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்திருக்கிறது.
‘Lighting’ என்பது புகைப்படக்கலையின் ஆதாரமான ஒன்று. ஒளியை எப்படி பயன்படுத்துவது என்பதும், அதன் பல்வேறு கூறுகளைப்பற்றியும் இப்பயிற்சி வகுப்பில் காணப்போகிறோம். ஒளியின் தன்மை, ஒளியின் அளவு, ஒளியின் வண்ணம், ஒளியின் அடர்த்து போன்றவற்றைப் பற்றியும், ஒரு தரமான புகைப்படத்திற்கு ஒளியின் அளவைப்போலவே ஒளியின் தரம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பார்க்கப்போகிறோம்.
இப்பயிற்சி வகுப்பில்..
1. ஒளியமைப்பின் அடிப்படையான Three Point Lighting மற்றும் அதன் பயன்பாடு.
2. ஒரே ஒரு விளக்கை (Light) வைத்துக்கொண்டு எப்படி பல்வேறு வகையில் ஒளியமைப்பது என்பதையும், அதனைப் பயன்படுத்தி எப்படி சிறப்பான புகைப்படத்தை எடுப்பது.
3. ஒளியை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி..? அதனை கட்டுப்படுத்துவது எப்படி..?
4. இயற்கையில் கிடைக்கும் ஒளியைப் எப்படி பயன்படுத்துவது?
5. ஒளி அமைக்க தேவைப்படும் பல்வேறு துணைக்கருவிகள் என்ன? அதனைப் பயன்படுத்துவது எப்படி..?
6. Portrait Lighting அமைப்பது எப்படி?
7. Pre & Post wedding புகைப்படங்களை எப்படி எடுப்பது?
போன்றவற்றோடு தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு நுட்பங்களை (Tips) பார்க்கப்போகிறோம்.
வாழ்வின் வசந்தங்களில் ஒன்று திருமணம். எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்துவிடுகிறது. புது உறவு இணைந்திடும் அந்நாட்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் நிறைந்தது. மணமக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்திலும் பரவசமும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும் அக்கணங்களை காலத்தில் அழியா பதிவாக்கிடுவதில் புகைப்படங்களும் கானொளிகளும் முக்கியபங்காற்றுகிறது. அத்தகைய முக்கிய நிகழ்வை முறையாக பதிவு செய்திட தேவையான அடிப்படை அறிவை இவ்வகுப்பு கொடுக்கும்.
ஆர்வம் கொண்ட நண்பர்கள் உடனே பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
நாள்:23-04-2019 காலை 9-30 முதல் மாலை 5-30 வரை
இடம்: தீபம் ஹோட்டல், சிங்காரதோப்பு, திருச்சி.
முன் பதிவு செய்பவர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படும். வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு குறைந்த வாடகையில் அறை ஏற்பாடு செய்து தரப்படும்.
அனைவருக்கும் அனுமதி கட்டணம் ரூ 1500/- (கிளப் உறுப்பினர்களுக்கு பெஸ்ட் போட்டோகிராபி டுடே மாத இதழ் இலவசம்)
அன்புடன் அட்மின் மற்றும் ஆர்கனைசர்கள்:
1. புலிவலம் ரவி (திருச்சி). செல்:- 9442777240
2. திரு. தீனதயாளன்- திருச்சி. செல்:- 9442408189.
3. திரு. இராஜா- ஈரோடு. செல்:- 9442138347.
3. திரு.ரமேஸ்- கிளியூர் செல்:- 7667115552.
கருத்துகள்
கருத்துரையிடுக