ராஜூவ் மேனன் அவர்களை, மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக, இயக்குநராக நாம் அறிவோம். நான் ஒளிப்பதிவாளனாக வரவேண்டுமென்ற எண்ணத்தை அவருடைய ‘பம்பாய்’ திரைப்படமே ஏற்படுத்தியது. அன்று முதல் இன்றுவரை, அவருடைய படைப்புகளை தொடர்ந்து கவனித்து கற்றுக்கொண்டு வருகிறேன்.
அண்மைக் காலங்களாக அவரோடு அறிமுகமும், பழக்கமும் ஏற்பட்ட பின்பு, அவரிடம் ஒளிந்து கிடக்கும் பல்வேறு திறமைகளை, ஆளுமையை நெருக்கத்தில் பார்த்து பிரமித்துப்போகிறேன். இத்தனை உயரமும், இத்தனை படைப்பாற்றலும் சும்மா வரவில்லை என்பதும், அதன் பின்னேயிருக்கும் அவருடைய ஈடுபாடும், உழைப்பும் அவர் மீதான மதிப்பையும், பிரமிப்பையும், நேசத்தையும் கூட்டிக்கொண்டே போகிறது.
ஒளிப்பதிவு, சினிமா குறித்து மட்டுமல்ல… வரலாறு, மேலாண்மை, தொழில்நுட்பம், வணிகம், அரசியல் என எத்துறைப் பற்றியும் அவரோடு உரையாடலாம், அதில் ஆழ்ந்த புலமையும் பார்வையும் கொண்டவர்.
கடந்த வாரம், பெரியாரைப்பற்றி ஒரு கட்டுரையை எனக்கு பகிர்ந்திருந்தார். அதன் பிறகான எங்களுடைய உரையாடலில், பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொண்டார். தமிழக அரசியல் களத்தில், அதன் வரலாற்று சுவடுகளில் அவர் இத்த்னை புலமை பெற்றிருப்பார் என்று சத்தியமாக நான் நினைத்திருக்கவில்லை.
கடந்த ஆண்டு, ஒருமுறை அவருடைய அலுவலகம் சென்றிருந்த போது, பாடல் ஒன்றைப்பாடிக்காட்டினார். ஆஹா… குரலும் பாவமும் அத்தனை சுகம். “ஏன் சார் நீங்க பாடுவதில்லை? சினிமாவில் பாடுங்களேன்” என்று கேட்டேன். சிரித்துக்கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு, அவர் இசை அமைத்து, பாடி ‘கடவுளும் நானும்’ என்ற பாடலை வெளியிட்டார். மதன் கார்க்கி எழுதிய அப்பாடல், என் மனதுக்கும், சிந்தனைப்போக்கிற்கும் நெருக்கமானது. இப்போது இப்பாடலை, வைரமுத்து எழுத, அவர் இசையமைப்பில் வந்திருக்கிறது. இரண்டு பாடலையும் கேளுங்கள், பாருங்கள், இசையில் அவருடைய ஆளுமை புரியும்.
Love You sir 😍😍😍🙏🙏🙏
Naalai Oru Poo Malarum | Naatpadu Theral
Kadavulum Naanum Song | Rajiv Menon | Madhan Karky |
#RajivMenon
கருத்துகள்
கருத்துரையிடுக