எப்பவோ வரைந்த பென்சில் ஓவியம் இது.
பல வருடங்களுக்கு முன்பு காமிக்ஸ் பார்த்து வரைந்தது. அநேகமாக ‘முதலைப்பட்டாளம்’ அல்லது ‘XIII’ -ஆக இருக்கலாம்.
காமிக்ஸ் இருவிதங்களில் நம்மை ஆட்கொள்ளும்…
1. அதன் கதை மற்றும் சாகசங்கள்
2. கதை நிகழும் களம் மற்றும் ஓவியங்கள்.
ஓவியங்களில் வெளிப்படும் புதிய சூழலும், களமும் வசிகரமானவை. உதாரணமாக… டெக்ஸ் வில்லர், டைகர், கேப்டன் பிரின்ஸ் கதைகளில் வெளிப்படும் ‘Landscape’-ஐ நாம் எப்போதாவது கடந்து வர முடியுமா? நம்மை பொறுத்தவரை, அது முழுக்க முழுக்க கற்பனையானது, நாம் கைக்கு எட்டாதது. அதை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் காமிக்ஸ் ஓவியங்கள் தவறவிடக்கூடாதவைகள்.
மேலும், அவ்வோவியங்களில் வெளிப்படும் உயிர்த்தன்மையை கவனிக்க பழகவேண்டும். மேலே உள்ள படத்தை வரைவதற்கு காரணம், அந்த லாரிகள் நகர்வதையும், கரடு முரடான பாதையில் அவை ஆடிக்கொண்டு செல்வதையும் நம்மால் உணர முடிகிறது அல்லவா. அதுவே இவ்வோவியத்திற்கு உயிர் கொடுக்கிறது. அதைத்தான் வரைந்து பார்க்க முயன்றேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக