முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (7)


வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது ஜூலை 30, 2000 ஆண்டு. 108 நாட்கள் கழித்து நவம்பர் 15 அன்று ராஜுகுமார் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இந்த இடைப்பட்ட காலங்களில் பெங்களூர் நகரம் முக்கிய செய்திகளில் இடம்பிடித்தது. ஒருபுறம் தமிழக-கர்நாடக அரசுகள் வீரப்பனோடு பேரம் பேசியன. மறுபுறம் வீரப்பன் தமிழர்களின் அடையாளமாக பார்க்கப்பட்டு, தமிழர் கன்னடர் விரோத போக்குகள் அதிகரித்தன. இந்நிலையில், ராஜ்குமாரோடு சேர்த்து கடத்தப்பட்ட மூவரில் ஒருவரானநாகப்பா’, செப் 28ஆம் தேதி, வீரப்பனின் பிடியில் இருந்து தப்பித்து வந்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. மீடியாக்கள் பரபரப்பாயின. அதுவரை காட்டில் என்ன நடக்கிறது என்பதை, நக்கீரன் கோபால், பழநெடுமாறன் அவர்களின் தலைமையில் சென்றிருந்த தூதுகுழு கொண்டு வரும் தகவல்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியதாக இருந்தது. இப்போது நேரடியாக சம்பந்தப்பட்டவர் வெளியேறி வந்திருக்கிறார், அவர் மூலம் வேறெதேனும் உண்மைகள் வெளிவரக்கூடும் என்று எல்லாப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் போட்டிப்போட்டு நாகப்பாவைப் பிடித்துவிட முயன்றார்கள்.


நாங்கள் கூட, நாகப்பா வசித்த வீட்டுப்பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தோம். ஒருவேளை நாகப்பா அங்கே வந்தாலும் வரலாம் என்று. என்னுடன்சகாய்என்ற பெங்களூர் தமிழ் நண்பர் வந்திருந்தார். அவருக்கு கன்னடமும் தெரியும் என்பதனால் உதவியாக இருந்தது. அந்த இரவு ஒரு பரபரப்பான இரவாக, சாகசம் நிறைந்த இரவாக மாறப்போவதாக நினைத்துக்கொண்டேன். அதுவரை படித்திருந்த பத்திரிக்கையாளர்களின் கதை, திரைப்பட நாயகர்களின் சாகசங்கள் எல்லாம் கண் முன்னே வந்துப்போனது. விடியும் வரை தூங்காமல் காத்திருந்தோம். ஒன்றும் நடக்கவில்லை. சக பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என்று பலர் கடந்து சென்றது மட்டுமே மிச்சம். ஒரு டீ குடிக்க கூட வழி இல்லை அந்த இரவில். மறுநாள் அரசுதான் பத்திரிக்கையாளர்களுக்கு நாகப்பாவை அறிமுகப்படுத்தி  வைத்தது


பிறகு ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட போது, மீண்டும் பெங்களூர் நகரம் பரபரப்பானது. சென்னையிலிருந்து ஆனந்தவிகடனின் முதன்மை புகைப்படங்காரர்களானகுமரேசன்’, ‘விவேக்போன்றோரும் மூத்த பத்திரிக்கையாளர்பாலகிருஷணன்அவர்களும் பெங்களூர் வந்தனர். ராஜ்குமார் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். விடுவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக மக்களைச் சந்திக்கும் நிகழ்வு அது. பெரும் கூட்டம் கூடி இருந்தது. நான் அதுவரை ராஜ்குமார் அவர்களை நேரடியாக பார்த்தது இல்லை. அங்கே கூடியிருந்த மக்களின் கோஷங்களும், அவர் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பையும் பார்க்க பார்க்க எனக்கும் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. காத்திருக்கத்துவங்கினோம்.


சில மணி நேர காத்திருப்புக்கு பின்பு, ராஜ்குமார் அவர்களின் வீட்டு மேல் மாடி சன்னல் திறந்தது. அதன் வழியாக ராஜ்குமாருடைய முகம் மெல்ல தெரியத்துவங்கியது. கூட்டம் அந்த முகத்தைப்பாத்து பெருத்த கோஷம் போடத்துங்கியது. பலர் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள். நான்ஜூம் லென்ஸ்கொண்ட ஒரு கேமராவின் வழி அவரைப் பார்த்தேன். அந்த முகம்அந்த முகம்இன்றும் என்னால் மறக்க முடியா முகம் அது. ஜும் லென்ஸ் உதவியோடு நெருக்கத்தில் பார்த்த அம்முகத்தில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒரு பிரபலத்தின் முகம் ஏன் அத்தனை பேரை வசிகரிக்கிறது என்பதற்கான காரணத்தை அன்று உணர்ந்தேன். அம்முகத்தில்வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஒரு வசிகரமும், கவர்ச்சியும் இருந்தது. கூடவே வயதின் காரணமாக ஏற்பட்ட முதிர்ச்சியும், பக்குவமும், ஒருவித தேஜஸும், முகம் முழுவதும் நிரம்பி வழிந்ததைக் கண்டேன். அந்த நொடியில் நானும் அவருடைய ரசிகனாய் மாறிப்போனேன். அதுநாள் வரை நான் அவருடைய எந்தத் திரைப்படத்தையும் பார்த்ததில்லை, என்றாலும் அந்த முகம் என்னைக் கட்டிப்போட்டது. கூடியிருந்தோரின் பெரும் கோஷம், பரவச குரல்கள், கூடவே அழுகுரல்களும் அச்சூழலை ஒருவித பரவச நிலைக்கு கொண்டு சென்றது. அதுவொரு கணம். வாழ்வில் எப்போதாவது நிகழும் கணம்.


சிறுது நேரம் பொறுத்து, தன்னுடைய ஒரு சிறிய கையசைப்பினால், அப்பெரும் கூட்டத்தின் கூச்சலை அடக்கினார் ராஜ்குமார். அவர் அமைதியாக இருங்கள் என்று கையசைத்தபோது கூட்டம் கட்டுப்பட்டு அமைதியாயிற்று. சில வார்த்தை பேசினார். கூட்டத்திற்கு நன்றி சொன்னார். பிறகு கையசைத்து விட்டு உள்ளே சென்று விட்டார். கூட்டம் அவரை வாழ்த்தி கோஷமிட்டது. பிறகு காவல்துறையின் முயற்சியால் கலைந்து சென்றது. நாங்கள் (விகடன் குழு) அவரை பேட்டி காண அவர் வீட்டிற்குள் சென்றோம். பொதுவான பத்திரிக்கை சந்திப்பிற்கு பிறகு, ஆனந்த விகடனுக்கென்று பிரதியோகமான பேட்டி ஒன்றை அன்று அவர் கொடுத்தார். ராஜ்குமார், அவருடைய மனைவி பர்வதம்மா, மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனித் ராஜ்குமார் என்று அனைவரும் உடன் இருந்தனர் என்று நினைவு. என்னுடைய சீனியர் புகைப்படங்காரர்கள் இருந்தபோதும், நானும் சில புகைப்படங்களை அன்று எடுத்தேன். அவை ஜூனியர் விகடனின் பிரசுரமாயிற்று


ராஜ்குமாரின் கடத்தல் சம்பவத்தில், பெங்களூர் சார்ந்த சம்பவங்களில், நான் எடுத்த சில, பல புகைப்படங்கள் அப்போதைய ஆனந்தவிகடன், ஜூனியர் விகடனில் பிரசுரமானது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. பத்திரிக்கையாளனாக ஏதோ செய்துவிட்டதாக தோன்றியது


கூடவே பல்வேறு பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்களைச் சார்ந்த நண்பர்களை அப்போது பெற்றேன். அதில் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையைச் சார்ந்த பெண் புகைப்படக்காரரைக்குறித்து ஒரு சம்பவம் இருக்கிறது. நான்பல்ப்வாங்கிய சம்பவம் அது… 


(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,