முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

01: திரைப்படத் தயாரிப்பு செலவினங்கள் (Major Expenses of A Movie)


 ‘1-4 கோடி பணத்தை வைத்துக்கொண்டு, திரைப்படம் எடுக்க வராதீர்கள்என்பதுதான் இப்போதைக்கு பேசும் பொருளாகியிருக்கிறது. உண்மையில் 4 கோடி என்பது பெரும் பணம் அல்லவா…!? எனில் அப்பணம் ஒரு திரைப்படம் எடுக்க போதுமானது இல்லை என்பதோ அல்லது 4 கோடிக்குள் எடுக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது என்பதோதான் இப்போதைய பிரச்சனை


எனில், ஒரு திரைப்படம் எடுக்க எவ்வளவு பணம்தான் வேண்டும்? அல்லது அப்பணம் எங்கெல்லாம் செலவாகிறது? இதை புரிந்துக்கொள்வது அவசியம் தானே..!


ஒரு திரைப்படத்தயாரிப்பில் பல்வேறு செலவினங்கள் இருக்கின்றன. ஒரு கதையை படமாக எடுக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனமோ அல்லது நடிகரோ முடிவெடுத்துவிட்டால், அங்கே இருந்து செலவினங்கள் துவங்குகிறது.


  • இயக்குநருக்கு ஒரு ‘Advance’ கொடுத்து உறுதிப்படுத்துகிறார்கள். அது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். (பெரும்பாலும் ஆயிரத்திலோலட்சத்திலோ இருக்கலாம். பெரிய இயக்குநர்களையும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு அது அதிகமாக இருக்கலாம்)
  • பெரிய நடிகர் என்றால், அவருக்கு ஒரு தொகை கொடுத்து(Advance) உறுதி செய்கிறார்கள். (லட்சம் முதல் கோடிகளில்)
  • இயக்குநரும், அவருடைய குழுவும் அமர்ந்து கதை, திரைக்கதை, வசனம், நடிகர்கள், படபிடிப்புத்தளங்கள், உடைகள், அரங்க வடிவமைப்பு, தொழில்நுட்ப குழு போன்றவற்றை முடிவு செய்யமுற்தயாரிப்பு பணி (Pre Production) செய்வதற்காக அலுவலகம் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறைந்தது மூன்று மாதங்களில் துவங்கி சில மாதங்கள் அதற்கு ஆகும். அந்த அலுவலகத்திற்கான வாடகை, உணவு, மின்சாரம், பயணப்படி, சம்பளம் என்று (சில லட்சங்கள்) செலவாகும்.
  • மேனேஜர்ஸ், அவருடைய உதவியாளர்கள் சம்பளம். (சில, பல ஆயிரங்களில் இருக்கலாம்)
  • இசையமைப்பாளருக்கு ஒப்பந்தம் போட்டு, படபிடிப்பிற்கு முன்பாக தேவைப்படும் பாடல்களை பதிவு செய்து வாங்குகிறார்கள். இசையமைப்பாளருக்கான சம்பளம், பிற இசைக் கலைஞர்களுக்கான சம்பளம் (சில, பல லட்சங்கள் )
  • பாடலாசிரியர், பாடகர்களுக்கான சம்பளம். (சில லட்சங்கள்)
  • ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்வது, அவருடைய உதவியாளர்களின் சம்பளம், படபிடிப்பிற்கு(Camera Department Materials) தேவையான பொருட்களை வாங்குவதற்கு என்று பணம் தேவைப்படுகிறது. (சில ஆயிரங்களில் துவங்கி லட்சங்களில் இருக்கும்)
  • கதைக்கு ஏற்ற முக்கிய, துணை நடிகர்களை முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போடுதல். (சில ஆயிரங்களிலிருந்து லட்சங்களில் தேவைப்படலாம்)
  • கேமரா, லென்ஸ், விளக்குகள், கிரேன், ட்ராலி போன்ற தொழில்நுட்பக் கருவிகளுக்கான வாடகை, ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பேசி, மொத்த படபிடிப்பு நாட்களைப் பொறுத்துமுன்பணம்கொடுத்து கேமரா நிறுவனங்களுக்கு (Camera Unit) ‘அக்ரிமெண்ட்போடுவார்கள். (ஒருநாளைக்கு 30k-வில் துவங்கி லட்சத்தில் இருக்கலாம். படத்தின் தேவையைப்பொறுத்து, விளக்குகளின் எண்ணிக்கை, கேமராவின் தரம், லென்ஸின் தேவை, பிற உபகருவிகளின் பயன்பாடு பொறுத்து இது வேறுபடும்)
  • கதைக்கு ஏற்ற அரங்கங்கள் அமைத்தல், அதற்கு தேவையான பொருட்களை ஏற்பாடு செய்தல், கலை இயக்குநர், அவருடைய உதவியாளர்களுக்கான சம்பளம் போன்றவற்றிற்கு பணம் செலவாகும். (சில, பல லட்சங்களில் இருக்கலாம்)


  • ஒவ்வொரு திரைப்படத்திற்கு, அதில் நடிக்கும் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கான உடைகளை தயாரிப்பு நிறுவனம் தான் செலவு செய்து ஏற்பாடு செய்கிறது. காரணம், பல்வேறு நாட்களில் நடக்கும் படபிடிப்பில், காட்சிகளுக்கு ஏற்ற உடைகளை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் அல்லவா, அதற்காகதான் தயாரிப்பு நிறுவனம் அதனை ஏற்பாடு செய்கிறது. உடையளங்கார நிபுணர் (Costumer), அவருடைய உதவியாளர்கள் சம்பளம், நடிகர்களுக்கான உடைகள் வாங்குவதற்கும், தைப்பதற்கும் பணம் செலவாகிறது (சில, பல லட்சங்களில் அது இருக்கும்)
  • படபிடிப்பிற்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்தல், பார்வையிடுதல், இடங்களுக்கான வாடகை, அனுமதிக்கான கட்டணம் என பணம் செலவாகிறது. (ஆயிரங்களில் துவங்கி லட்சங்களில் இருக்கலாம்)
  • படத்தொகுப்பாளர், நடன இயக்குநர், சண்டை பயிற்சியாளர், புகைப்படக்காரர், ஒப்பனைக் கலைஞர் என்று பிற தொழில்நுட்பாளர்களையும் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்படுகிறது. (சில ஆயிரங்கள் முதல் லட்சங்கள் ஆகலாம்)
  • கதை, திரைக்கதை, வசனம், நடிகர்கள், பாடல்கள், உடைகள், படபிடிப்புத்தளங்கள், அரங்குகள், கருவிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றவற்றை முடிவு செய்தப் பிறகே படபிடிப்பிற்கு கிளம்புகிறார்கள்.


    படபிடிப்பில் பல்வேறு செலவினங்கள் இருக்கிறது அதனைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.



(தொடரும்)


#Cinema  #tamilcinema  #movies  #MovieMaking  #filmmaking  #expenses #filmexperience #vijayarmstrong 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,