முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

02: திரைப்படத் தயாரிப்பு செலவினங்கள் (Major Expenses of A Movie)


கதை
, திரைக்கதை, வசனம், நடிகர்கள், பாடல்கள், உடைகள், படபிடிப்புத்தளங்கள், அரங்குகள், கருவிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றவற்றை முடிவு செய்தப் பிறகே படபிடிப்பிற்கு கிளம்புகிறார்கள்.

படபிடிப்பில் (Production) பல்வேறு செலவினங்கள் இருக்கிறன. பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் உழைப்பையும் கோரக்கூடிய இடம் இது. தொழில்நுட்பாளர்களும், கலைஞர்களும் இணைந்துகலையைபடைத்திடம் இடம்.


  • இயக்குநர் மற்றும் அவருடைய உதவியாளர்கள் (குறைந்தது 1+5 நபர்கள்)
  • ஒளிப்பதிவாளர் மற்றும் அவருடைய உதவியாளர்கள் (1+3)
  • கலை இயக்குநர் மற்றும் அவருடைய உதவியாளர்கள் (1+3)
  • மேலாளர்கள் (Managers) மற்றும் அவருடைய உதவியாளர்கள் (1+3)
  • லைட்மேன்ஸ் (விளக்குகளை கையாளுபவர்கள்) (10+)
  • ஜெனரேட்டர் இயக்குபவர் (1+1)
  • Photo Flood - என்று அழைப்படும் மின்சார வல்லுநர்கள். அரங்கங்கத்தில் இருக்கும், டேபிள் லேப், டீயுப் லைட் (Practical Lamps), Mike, Speakers, Fans போன்றவற்றை கையாளுபவர்கள் (1+1)
  • புகைப்படக்காரர் மற்றும் உதவியாளர்(1+1)
  • கேமரா உதவியாளர்கள் (2+2)
  • களத்திலேயே படத்தொகுப்பு செய்யும் Spot Editors (1+1)
  • Digital Imaging Technicians(DIT) என்று அழைப்படும், படம் பிடித்த கோப்புகளை கையாளும், பத்திரமாக சேமித்து வைக்கும் வல்லுநர் (1)
  • கிரேன், டிராலி இயக்குபவர்கள் (6+)
  • ஒப்பனையாளர் மற்றும் உதவியாளர்கள் (1+3)
  • உடையலங்கார நிபுணர் மற்றும் உதவியாளர்கள் (1+2)
  • உணவு பரிமாறுபவர்கள் (5+)
  • வாகன ஓட்டிகள் (10+)


என்று ஒருநாளை குறைந்தது 50 -இல் இருந்து 100 நபர்கள் வரை தேவைப்படும். பாடல்காட்சிகள், சண்டைக்காட்சிகள் எடுக்கும் நாட்கள் என்றால், அதிகபடியான கேமராக்கள், கருவிகள், நடனக்கலைஞர்கள், சண்டைக்கலைஞர்கள் அவர்களுக்கு தேவையான கருவிகளை கையாளுபவர்கள் என்று மேலும் ஆட்கள் தேவைப்படும் இடம்.


சராசரியாக ஒரு நாள் படபிடிப்பிற்கு


  • படபிடிப்புத்தளம் அல்லது இடம். வீடோ, கடையோ, தெருவோ அதற்கென்று செலவுகள் உண்டு. வீடு, கடை என்றால் வாடகை. தெரு என்றால் அனுமதி கட்டணம். (சில, பல ஆயிரங்களில் இருக்கும்)
  • நடிகர்களின், துணை நடிகர்களின் சம்பளம் (சில பல ஆயிரங்கள்)
  • தொழில்நுட்ப கலைஞர்கள், படபிடிப்பிற்கு துணை நிற்கும் பிற தொழிலாளர்கள்அவர்களுக்கான சம்பளம். (சில,பல ஆயிரங்கள்)
  • அனைவரையும், படபிடிப்புத்தளத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான வாகன, போக்குவரத்து செலவுகள் (சில பல ஆயிரங்கள்)
  • அனைவருக்கும் உணவு மற்றும் காபி, டீ போன்ற செலவினங்கள் (சில பல ஆயிரங்கள்)
  • படப்பிடிப்பிற்குத் தேவையான தொழில்நுட்பக்கருவிகளுக்கான வாடகை (சில பல ஆயிரங்கள்)
  • அரங்கங்களுக்கு, அன்றைய காட்சிக்குத் தேவையான பொருட்களை வாங்குவது (சில ஆயிரங்கள்)
  • ஜெனரேட்டர், வாகனங்களுக்கான டீசல், பெட்ரோல் செலவுகள் (சில ஆயிரங்கள்)


என்றுகுறைந்தது ஒன்று, இரண்டு லட்சத்திலாவது செலவுகள் இருக்கும். பெரியப்படங்களுக்கு பல லட்சங்களில் ஆரம்பித்து, கோடிகளில் செலவாகலாம்.


ஒரு திரைப்படம் எடுக்க குறைந்தது 60 நாட்களிலிருந்து 100 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். மலையாளத் திரையுலகில் 25-40 நாட்களுக்குள்ளாக படபிடிப்பை நடத்திவிடுகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். இங்கே தமிழ் திரைப்படவுலகில் குறைந்தது 60 நாட்களாவது ஆகிறது. எனில், படபிடிப்பு செலவுகளை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்


படபிடிப்பிற்கு பிறகு… Post Production என்று அழைப்படும் பிற்தயாரிப்புகளில்


  • படத்தொகுப்பு (Rough Editing, Final Editing) - (சில, பல ஆயிரங்கள்
  • டப்பிங் (Dubbing / ADR) - (சில, பல ஆயிரங்கள்)
  • சிறப்பு சப்தம் சேர்ப்பு (Sound Effects) - (சில, பல ஆயிரங்கள்)
  • VFX (Visual Effect) - (சில, பல ஆயிரங்களிலிருந்து பல லட்சங்கள் ஆகலாம்)
  • பின்னணி இசை கோர்ப்பு (Background Score / Rerecording) - (சில, பல ஆயிரங்களிலிருந்து பல லட்சங்கள் ஆகலாம்)
  • வண்ண சீரமைப்பு (DI - Color Grading) - (சில, பல லட்சங்கள்)
  • ஒலி கலவை (Sound Mixing)- (சில, பல ஆயிரங்களிலிருந்து பல லட்சங்கள் ஆகலாம்)


பிறகு, திரைப்படத்தை விளம்பரப்படுத்த பயன்படும் செலவினங்கள் என்று ஒரு பட்டியல் உண்டு.


Promotion Expenses என்று அழைக்கப்படும் விளம்பர செலவினங்கள்


  • போஸ்டர் வடிவமைப்பு, Designer-க்கான சம்பளம்  ( பல ஆயிரங்களிருந்து, பல லட்சங்கள் ஆகலாம்)
  • போஸ்டர் பிரிண்டிங், சுவர்களில் ஒட்டுவது ( பல ஆயிரங்களிருந்து, பல லட்சங்கள் ஆகலாம்)
  • இசை வெளியீடு (பல லட்சங்கள்)
  • பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள் ( பல லட்சங்கள் )
  • பத்திரிக்கையாளர் சந்திப்பு, கூட்டங்கள், பயணம், அரங்குகளின் வாடகை (பல ஆயிரங்களிருந்து, பல லட்சங்கள் ஆகலாம்)


இப்படி பல்வேறு செலவினங்களை, ஒரு திரைப்படத் தயாரிப்பில் இருக்கிறது. பொதுவாக ஒரு சிறிய படத்திற்கு.. 


  • ஒருநாளைக்கு படபிடிப்பு செலவுகள் - 1 -இலிருந்து 1 1/2 லட்சங்களில் இருந்தது. அது இப்போது உயர்ந்திருக்கலாம்.
  • தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் - 20-இலிருந்து 30 லட்சங்கள் இருந்தது.
  • நடிகர்களின் சம்பளம் - 20-இலிருந்து 50 லட்சங்கள் இருந்தது.
  • பிற்தயாரிப்பு செலவினங்கள் - 10-இலிருந்து 20 லட்சங்களில் இருந்தது.
  • விளம்பரம், போஸ்டர், இசை வெளியீடு - 10-இலிருந்து 50 லட்சங்கள் வரை ஆகலாம்.


இவையெல்லாம், குத்து மதிப்பாக, ஒரு சிறிய திரைப்படத்திற்கு ஆகும் செலவினங்கள். அதாவது 1 கோடியிலிருந்து 2 கோடிக்குள்ளாக எடுக்கும் திரைப்படங்கள். இதற்கும் குறைவாக 40 - 60 லட்சங்களில் திரைப்படங்களை எடுத்துவிட முடியும் என்று நம்புவதும், அதனை முயற்சித்தவர்களும் உண்டு


அப்படி திரைப்படங்களை குறைந்த செலவினங்களில் எடுத்திட அசாத்தியமான திறமையும், அனுபவமும் வேண்டும்.


அல்லது 


அறியாமையும், மூடத்தனமும் வேண்டும்.


குறைந்த செலவில் திரைப்படங்கள் எடுப்பதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.


(தொடரும்)



#Cinema  #tamilcinema  #movies  #MovieMaking  #filmmaking  #expenses #filmexperience #vijayarmstrong 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,