முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Teacher’s Day:


அம்மா, பாட்டி, அப்பா, தாத்தா, அண்ணன், மாமா, அத்தை, சின்னம்மா என பிறந்ததிலிருந்து இன்றுவரைஎத்தனை வாத்தியார்களை கடந்து வந்திருக்கிறோம் நாம்…! . உணவு உண்பது, உடை அணிவது, பேசப் பழகுவது என்று தொடங்கி, வாழ்தலுக்கான தேவைகளனைத்தையும் நாம் கற்றுக்கொண்டேதான் வளர்கிறோம். கற்றல் ஒன்றே நம்மை நிரந்தரமாக்குகிறது


எல்லோரும் நினைப்பது போல, குரு என்பவர் ஒருவரல்ல. வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குரு நம்மை வந்தடைவார். குரு என்பவருக்கு எப்படி பல மாணவர்களோஅதேபோல ஒரு மாணவனுக்கு பல குருமார்கள்


வாழ்வின் அப்போதையப்படிக்கள்ளைகடப்பதற்கு மட்டுமல்ல, தொடர்ந்து படிகளில் ஏறுவது எப்படி என்ற பாடத்தையும் கற்றுத் தருபவரே குருவாகிறார். கடக்க உதவுபவர்கள் நண்பர்களாகிறார்கள். பின்வரும் காலங்களில் இருவருமே நம்மோடு பயணிப்பவர்கள். நண்பர்கள் தோளோடும்குருமார்கள் மனதோடும். இருவரும் அன்புக்கும் நன்றிக்கும் உரியவர்கள்


இயற்கையை போல ஒரு ஆசிரியர் உண்டா..! வானமும், வனமும், மலையும், காடும், கடலும் கற்றுத்தராத பாடம் ஏதேனும் உண்டா..!


போலவேதூரத்திலிருந்து கற்றுத்தந்த குருமார்களின் பட்டியலும் அதிகம் தானே..!? சந்தித்திருக்க மாட்டோம், என்றாலும் தங்களின் சொல்வழி, படைப்பு வழி, வாழ்தல் வழி நமக்கு குருவானவர்கள் அநேகம்பேர் அல்லவா


சிலர் நம் வாழ்வில் பங்குபெறுகிறார்கள். அப்படி நான் பெற்றுவந்த குருமார்கள் பலர் இருக்கிறார்கள். சிலரை இங்கே நினைவு கூறுகிறேன்



ஜானி சார் (Leonard Johny): பதினொன்னு பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு இயற்பியல் வாத்தியார். பாடமட்டுமல்ல, வாழ்வின் நெறிகளையும் போதித்த குரு அவர். இசை, சினிமா, புத்தகம், அரசியல் என எல்லவற்றையும் பேசும் தோழனும் கூட… 




Gnanam Subramanian: திரைப்பட உலகத்திற்குள் நுழைவதற்கு வாய்ப்புகள் தேடி அலைந்தக் காலத்தில்தோள்கொடுத்த தோழன். ஒளிப்பதிவு குறித்த பல்வேறு ஆரம்பகாலப் பாடங்களுக்கு தன்னுடைய கல்லூரி(Dft) புத்தகங்கள் மூலமாகவும், தாம் கற்ற கல்வியைப் பகிர்ந்தும்சந்தேகம் தெளிவித்த ஆசான். என்றும் என் ஆசான், தோழன், சகோதரன்




P.C.Sreeram: ஏழாம் வகுப்பு படிக்கும்போதுஇதயத்தை திருடாதே’, ‘அபூர்வ சகோதரர்கள்பார்த்தேன், அன்று அதன் ஒளிப்பதிவாளர் இவரென்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் மனதில் நின்றது. எட்டாம் வகுப்பு காலத்தில்கோபுர வாசலிலே’, பிறகுதேவர்மகன்’, ‘குருதிப்புனல்’ ‘நாயகன்’, ‘மௌனராகம்என்று தேடித் தேடிப்பார்த்தபோதுஎப்படி நமக்கு பிடித்த படங்களுக்கெல்லாம் இவரே ஒளிப்பதிவாளராக இருக்கிறாரே..!? என்று ஆச்சரியம் ஏற்பட்டது. கட்டைவிரல் கேட்காத துரோணாச்சாரியார். இன்று அன்பும் அரவணைப்பும் கொண்ட குரு இவர்




Rajiv Menon: அப்போது பனிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தேன். அடுத்து என்ன படிப்பது என்ற கேள்வியோடு இருந்த காலத்தில், என்னுள், நான் ஒருஒளிப்பதிவாளனாகவர வேண்டும் என்ற எண்ணத்தை தன்னுடையபம்பாய்திரைப்படத்தின் மூலம் விதைத்தவர். முன்னோடி, ஆதர்சன நாயகர். இன்று அன்பும் தோழமையும் கொண்ட குரு இவர்




Editor B.Lenin: நான் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தபோது, சந்தித்த முதல் ஆளுமை. சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இவர் பெயர் பரிட்சியம் எனக்கு. காரணம் என் அண்ணன் பெயரும் லெனின் தான். அதனால், இவர் பெயர் தென்படும் போஸ்டர் கொண்ட திரைப்படங்களை விடாமல் பார்த்தும் கவனித்தும் வந்திருக்கிறேன். பிறகு சினிமா பற்றிய ஆர்வம் ஏற்பட்டபோது, இவருடைய படங்களே பாடங்களானது. இவரோடு நான் மூன்று குறும்படங்களிலும், இளையராசாவைப்பற்றிய ஒரு தொலைக்காட்சி ஆவணப்படத்திற்கும் ஒளிப்பதிவாளனாக பணிபுரிந்திருக்கிறேன். நான் எடுத்த சுடுவுகள்(ஷாட்ஸ்) எப்படி கோர்க்கப்பட்டு, உணர்வு பூர்வமான காட்சிகளாக மாறுகிறது என்பதை இவருடைய படத்தொகுப்பு கூடத்தில் அமர்ந்துதான் கற்றுக்கொண்டேன். ஒளிப்பதிவிற்கும் முன்பாக, படத்தொகுப்பு எனும் கலையை பற்றிய புரிதலை போதித்த ஆசான். கூடவே வாழ்வின் நெறிகளையும் போதிக்கும் குரு




B.Kannan: என் ஒளிப்பதிவு குரு. அதுவரை படைப்பிடிப்புத்தளமென்றால் பரபரப்பும், கண்டிப்பும் மிகுந்த இடமாக நினைத்துக்கொண்டிருந்த என் எண்ணத்தை மாற்றியமைத்தவர். இவரிடம் பணிபுரிந்த பிறகே நான் முழுமை பெறுகிறேன். அன்பும் தோழமையும் கொண்ட தந்தை இவர். குரு என்பதை விட, தந்தை என்றே இவரை நினைவில் கொள்கிறேன்




Dir. Barathiraja: கண்ணன் சாரோடு பணிபுரிந்தமையால் இவரோடு பணிபுரியும் வாய்ப்புகள் அமைந்தது. இவரிடம் உதவியாளனாக பணி புரியவில்லை என்றாலும், என்னை அப்படித்தான் நடத்துவார். எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொள்வார், போதிப்பார். படபிடிப்புத்தளத்தில் ஒரு இயக்குநர் எப்படி இயங்க வேண்டும் என்பதை ஒவ்வொரு இயக்குநரும் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். சுடுவு (ஷாட்ஸ்) அமைப்பது, நடிப்பு, வசன உச்சரிப்பு, மட்டுமல்லாமல் காட்சியில் பங்குபெறும் அத்துனை நடிகர்களுக்கும், பின்புல காட்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். அவரே முன்னின்று அனைத்தையும் அமைப்பார். கடின உழைப்பாளி. ஒரு திரைப்படத்தின் அத்துணை சுடுவுகளும் அவருடைய எண்ணத்தில் இருக்கும். இரவு எத்தனை நேரமானாலும், அன்று படம் பிடித்ததை, விட்டுப்போனதை, எடுக்க வேண்டியதை தன்னுடைய டைரியில் எழுதி விட்டுதான் உறங்க செல்வார். என் ஆதர்ஷன இயக்குநர், குரு இவர்




CJ Rajkumar: என் சினிமா வாழ்வின் துவக்கத்தில், அவர் வீட்டில் பாடம், உணவு, லேப் விசிட், திரைப்படம் பார்க்க, சினிமா ஆளுமைகள் சந்திப்பு என எல்லா இடத்திற்கு உதவியாளர் என்று கருதாமல், தோழனாக அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியவர், போதித்தவர். அவருடைய முதல் திரைப்படமானகனவு மெய்படவேண்டும்படத்தில் இணை ஒளிப்பதிவாளராக என்னை இணைத்துக்கொண்டவர்




Dwaraganath Rangaraj: ஒளிப்பதிவு உதவியாளனாக நான் பணி புரிந்த முதல் படம்ஆட்டோகிராப்’. அதன் ஒளிப்பதிவாளர் இவர். கண்டிப்பு மிகுந்த ஆசான். இன்று யோசித்துப்பார்க்க, படபிடிப்புத்தளத்தில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு ஒழுக்கங்களை, நுணுக்கங்கள், நடைமுறைகளை இவரிடமிருந்தே கற்றுத்தேர்ந்திருக்கிறேன் என்பது புரிகிறது




Sanjay Loknath: என்னுடைய திரைப்பட வாழ்வின் ஆரம்ப நாட்களில் இவரோடு பணி புரிந்திருக்கிறேன். அன்பும் அமைதியும் கொண்டவர். சில விளம்பர படங்களில் உதவியாளனாக பணிபுரியும் வாய்ப்பைத் தந்தவர். பெரும் கனவுகளை சுமந்து செல்ல ஆற்றலைத்தரும் வார்த்தைகளை எனக்கு பரிசாக தந்தவர்




Agilan (Kalyan): ஒரு ஒளிப்பதிவாளராக அல்லாமல் தோழனாக அறிமுகமானவர். இவரோடு இணைந்து பல்வேறு விளம்பரப்படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். ஒளிப்பதிவின், ஒளியமைப்பின் வேறொரு பக்கத்தை, திறப்பை அறிமுகப்படுத்தியவர். விளம்பரப்படங்கள் தயாரிப்பில்எழுத்து, நடிகர்கள் தேர்வுபடபிடிப்பு, படத்தொகுப்பு, பிற்தயாரிப்பு பணிகள் என எல்லாவற்றிலும் உடன் இணைத்துக்கொண்டு, கற்றுத்தந்தவர். என்றும் அன்பும் தோழமையும் கொண்ட குரு இவர்.




Siddharth Ramaswamy: ‘யாரிடி மோகனிதிரைப்படத்தில் இணை ஒளிப்பதிவாளராக இவரோடு பணி புரிந்தேன். ஒளிப்பதிவு நுணுக்கத்தில் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தியவர். அன்பும் தோழமையும் கொண்ட ஆசான்


நன்றியும் அன்பும் என் குருமார்களேநீங்களே என்னை முழுமையாக்கினீர்கள் 😍😍😍🙏🙏🙏🙏





#teachersday #wishes #pcsreeran #rajivmenon #bkannan #blenin #barathiraja #agilan #cjrajkumar #dwaraganath #sanjayloknath #agilan #siddharthramaswamy #tamilcinema #tamilmovies #vijayarmstrong #cinematography #cinematographer 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,