முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்:

அண்மைக் காலமாக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அடுத்தத் தலைமுறை தொலைக்காட்சி 'HDTV' தொழில்நுட்பம் வந்துவிட்டது என்பதை. இந்த 'HD' என்பது என்ன? அதில் படங்கள் எப்படி இருக்கும்? இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் படத்திற்கும் HD படத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிய ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால் இது உங்களுக்கான கட்டுரை.


HD தொலைக்காட்சியைப்பற்றி (HDTV) தெரிந்துகொள்ள, நாம் முதலில் 'DIGITAL' பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும். அதற்கு முன், 'டிஜிட்டல்'(Digital) தொழில்நுட்பத்தில் பயன்பாட்டிலிருக்கும் சில தொழில்நுட்பப் பெயர்களுக்கு அர்த்தம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.


வீடியோ பிம்பங்களை, குறிப்பாக தொலைக்காட்சிப் பிம்பங்களைக் குறிப்பிடும் போது, மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுவார்கள். ஒரு வரிசையில்(Line) எத்தனை 'பிக்சல்கள்' உள்ளன என்பதும் ஒரு பிம்பத்தில் எத்தனை வரிசைகள்(Lines) உள்ளன என்பதும் அது எவ்வகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்பதாக. அதாவது Progressive(P) or Interlaced(I) பிம்பமா அது என்பதும் ஒரு நொடியில் வரும் 'Fields' எண்ணிகையும் சேர்த்து குறிப்பிடுவார்கள்.(Number of pixels per line x number of lines per frame/vertical refresh rate (in Hz) progressive or interlaced )


1920 x 1080/50i என்பதில் 1920 x 1080 என்பது அப்பிம்பத்தில் உள்ள பிக்சல்களின் எண்ணிகையை குறிக்கிறது. 50i என்பது ஒரு நொடிக்கு 50 'interlaced' fields (per second) என்பதைக் குறிக்கிறது.


பிக்சல்ஸ் (Pixels): தொலைகாட்சி பெட்டியை 'ON' செய்தால் படம் வராமல் இருக்கும் போது புள்ளிப் புள்ளியாக வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்புள்ளிகள், மின்சாரத்தால் தூண்டப்பட்டு உருவாகும் 'எலட்ரானிக்' கதிர்கள். அது தொலைக்காட்சிப் பெட்டியின், திரை முழுவதையும் நிரம்பி இருப்பதை பார்த்திருப்பீர்கள். அத்துகள்கள் தான் பிம்பத்தின்(Image) தகவல்களை கொண்டு வருகின்றன. அதன் மூலமாகவே நாம் படத்தைப் பார்க்க முடிகிறது. இது 'அனலாக்'(Analog) முறை.


இதே போல 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், ஒரு பிம்பத்தை புள்ளிகளால் பிரிக்கிறார்கள். வரிசையாக அடுக்கப்பட்ட புள்ளிகள். குறுக்கும் நெடுக்குமாக வரிசைப்படுத்தப்பட்ட புள்ளிகள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒரு 'பிக்சல்'(Pixel) என அழைக்கப்படுகிறது. ‘Picture cell’ or ‘Picture element' என்பதன் சுருக்கமே 'Pixel'. 


இதில் நீலகட்டம் ஒரு பிக்சல், சிவப்பு கட்டம் ஒரு பிக்சல்

பிம்பத்திலிருக்கும் ஒரு புள்ளியின் தகவல்களை அது கொண்டிருக்கும். பிம்பத்தின் வண்ணம் மற்றும் வெளிச்ச அளவுகளை (R, G, B, Chrominance and Luminance) அது கொண்டிருக்கும். இந்த ஒவ்வொரு தனிப்பட்ட 'பிக்சல்கள்' தாங்கியுள்ள தகவல்களைக் கொண்டே ஒரு பிம்பம் (Image/Picture) உருவாக்கப்படுகிறது.  இப்புள்ளிகள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடைமட்டமாகவும் (Horizontal) செங்குத்தாகவும் (Vertical)  அடுக்கப்பட்டிருக்கும்.


கிடைமட்டமாக (Horizontalஅதாவது அகலம் (Width) மற்றும்  செங்குத்தாக (Vertical) அதாவது உயரத்திலும் (Height) இருக்கும் 'பிக்சல்களின்' எண்ணிக்கையை குறிப்பது. 720 x 576 என்பதில் அகலத்தில் 720 பிக்சல்களும் உயரத்தில் 576 பிக்சல்களும் உள்ளது என்பதை குறிக்கிறது.


'ரெஸலுஷன்' (Resolution): பிக்சல்ஸ்(Pixels)-களின் எண்ணிக்கையைக்கொண்டு அப்பிம்பத்தின் அடர்த்தியை குறிப்பது. பிக்சல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதன் அடர்த்தி அதிகரித்து அதனால் அப்பிம்பத்தின் துல்லியம் (Information: Color,Brightness,Sharpness..etc) அதிகரிக்கும். 


'இண்டர்லேஸ்' (Interlaced Scan):  இரண்டு அடுத்தடுத்த வரிசையை(lines) தனித்தனியாக ‘ஸ்கேன்’ செய்வது. 1,2,3,4,5..வரிசையில் 1,3,5.. (odd number) என்பதை ஒரு தடவையும் 2,4,6..(even number) என்பதை மற்றொரு தடவையும் ஸ்கேன் செய்வது. படம் பிடிக்கும் போது இம்முறையில் பிம்பத்தின் தகவல்கள் சேமிக்கப்படுகிறன. தொலைக்காட்சியில், இவ்விரண்டு வரிசைகளின் தொடர்ச்சியான மாற்றத்தின் மூலம் பிம்பம் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரு நொடிக்கு 25 frames. ஒரு ஃபிரேமை இரண்டு வரிசை(lines) பிம்பங்களாக பிரிப்பதால் (25 x 2 fields) 50i என குறிக்கப்படுகிறது.
(The vertical refresh rate shown for interlaced scans is twice the whole frame rate.two interlaced fields make up one whole frame)


'புரோகரஸிவ்' (Progressive scan): 'இண்டர்லேஸ்' ஸ்கேனைப்போலில்லாமல் மொத்த வரிசைகளையும்(lines) ஒரே தடவையில் ஸ்கேன் செய்வது. மொத்த வரிசைகளையும் ஒரே தடவையில் காட்டுவது.


NTSC: The National Television Systems Committee என்பதன் சுருக்கம். அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, ஜப்பான் போன்ற நாடுகளில் உபயோகப்படுத்தப்படும் 'அனலாக்' வண்ணத் தொலைக்காட்சி தொழில்நுட்பம், ஒரு நொடிக்கு எத்தனை பிம்பங்கள் திரையில் காட்டப்படுகிறது என்பதை நிர்ணயிக்கிறது. அந்நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் மின்சாரத்தைப் பொருத்து இது மாறுபடும். (மின்சாரத்தை பற்றி தெரிந்தவர்களிடம் இதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்). நொடிக்கு 30 Frames என்ற கணக்கில் NTSC -இல் இருக்கும். '525/60 line and field format' - இதில் '525' என்பது வரிசையின்(lines) எண்ணிக்கையை குறிக்கிறது.


PAL: Phase Alternate Line என்பதன் சுருக்கம். ஐரோப்பாவின் பெரும்பான்மையான நாடுகளில் பயன்படுத்தப்படும் 'அனலாக்' வண்ணத் தொலைக்காட்சி தொழில்நுட்பம். இந்தியாவில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது. நொடிக்கு 25 Frames என்ற கணக்கில் PAL அமைப்பு இருக்கும்.'625 line/50 field format'.


Note that the PAL term is frequently used to describe any 625/50I analog format – even if it is component, or in the 576/50I digital television system where PAL coding is not used.


SECAM: 'ஃபிரான்ஸில்' பயன்படுத்தப்பட்ட 'அனலாக்' வண்ணத் தொலைக்காட்சி தொழில்நுட்பம். UK மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் PAL தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கு முன்னால் பயன்படுத்தினார்கள்.


குறிப்பு: இந்த தொழில்நுட்பங்களைப்பற்றி இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள நீங்கள் வேறு கட்டுரைகளை/ புத்தகங்களைத்தான் நாட வேண்டும். இங்கே மேலோட்டமாக நீங்கள் புரிந்துகொள்ளக் கூடிய வகையில்/ தேவையான அளவில் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. 


இப்போது HD-ஐ பற்றிப் பார்ப்போம்.

HD என்பது 'ஹை டெஃபினிஷன்' (High Definition) என்பதன் சுருக்கம். 'ஹை டெஃபினிஷன்' என்றால் அதிக செறிவுள்ள அல்லது அதிகத் தரமுள்ள படங்கள் என அர்த்தம் கொள்ளலாம்.  தற்போது நம் வீடுகளிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் படங்கள் 'SD' (Standard Definition) வகைப்படங்கள். 720 x 576 பிக்சல் பிம்பங்கள். 'டிஜிட்டல் TV (DTV/ DVD) படங்கள் 1280 x 720 பிக்சல் இருக்கும்.  'HD படங்கள் 1920 x 1080i பிக்சல் கொண்டதாக இருக்கும். அதிக 'ரெசலூஷன்' (Resolution) கொண்ட படங்கள் என்பதனால் படங்கள் தெளிவாக இருக்கும். இவை 'புரோகரஸிவ்' (Progressive scan) மற்றும் 'இண்டர்லேஸ்'(Interlaced Scan) ஆகிய இரண்டு தொழில்நுட்பத்திலும் செயல்படுகின்றன.


1280 X 720 pixels என்பது 720/60p


1920 x 1080 pixels என்பது 1080/50i


வியாபார நோக்கத்தில் சொல்லும்போது frames/fields எண்ணிகையை விட்டுவிட்டு, 'Resolution' மதிப்பில் 1080i என்கின்றனர். அதனால் தான் பிளாஸ்மா TV-களில் HDTV 1080i என குறிப்பிடுகிறார்கள்.


நம்முடைய வழக்கமான TV-யின் பரப்பளவு 4:3 என்ற 'ஆஸ்பெக்ட் ரேஸியோ'(aspect ratio) -வில் இருக்கும். HDTV-இன் 'ஆஸ்பெக்ட் ரேஸியோ' 16:9 பரப்பளவில் இருக்கும்.


இவ்வகை பிம்பங்களை படம் பிடிக்க CCD, CMOS, 3MOS சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது. பிம்பங்களை MPEG-2, MPEG-4 / AVC, MPEG-4 AVC/H.264 போன்ற Formats -களைப் பயன்படுத்தி சேமித்து வைக்கிறார்கள். இந்த 'formats'-கள் அதிகமாக இடத்தை எடுக்காமல், தரத்தையும் குறைக்காமல் பிம்பத்தை சேமித்து வைக்க உதவுகின்றன.


SD படம்
 HD படம் (not Original, just to understand)

ஒலியை பொருத்தமட்டும் பலவித 'கோடக்குகள்'(Codec) பயன்படுத்தப்படுகின்றன. 'dts' 'dolby' 'Surround Sound' 'THX' போன்ற ஒலிப்பதிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


இப்போது திரைப்படம் எடுப்பதற்கும் HD தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அவை இன்னும் கொஞ்சம் அதிக 'Resolution'-களில் படத்தை பதிவுசெய்கின்றன. 2K, 4K 'ரெஸலூஷன்'களில் படம் எடுக்கிறார்கள்.
HD தொழில்நுட்பத்திற்கான கேமராக்கள்: 'SONY', 'PANASONIC', 'RED ONE', 'ARRI D20-D21-ALEXA', 'THOMPSON GRASS VALLEY-VIPER' 'PANAVISION GENESIS' என பல நிறுவனங்களின் கேமராக்கள் பலவுண்டு. 

(தற்போது Canon EOS 5D Mark II, Canon EOS 5D Mark III, Canon EOS C300, Canon EOS C500 போன்ற கேமராக்களும் பயன்படுத்தப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்) 

வளர்ச்சி பாதை:
1950-இருந்து NTSC, PAL மற்றும் SECAM தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 'அனலாக்' வண்ண தொலைகாட்சிகள் செயல்பட்டன.


பிற்பாடு 1983-களில் 'சேட்டலைட்(Satellite) தொலைக்காட்சி வசதியெல்லாம் வந்தபோது 'Digital TV' கொண்டு வந்தார்கள். வழக்கமான 'Standard Definition' வகை பிம்பங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கொடுத்தார்கள். நீங்கள் அறிந்திருப்பீர்கள், 1990-களில் 'Sun TV', தான் டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு மாறிவிட்டதாக விளம்பரங்கள் செய்ததை. 


1990-இல் அமெரிக்காவில் HDTV  'Digital HDTV Grand Alliance' அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பொதுமக்களுக்கான HDTV அமெரிக்காவில் July 23, 1996 துவங்கப்பட்டது. 


ஐரோப்பா நாடுகளில் January 1, 2004 முதல் HDTV ஒளிபரப்பப்பட்டது. 2009-இல் 114 HD தொலைக்காட்சி ஒளிப்பரப்பு இருந்தன. 6 million பார்வையாளர்கள் HDTV-க்கு இருந்தார்கள். இது 2013 -இல் 24.7 million பார்வையாளர்களாக அதிகரிக்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள்.


நம் நாட்டுக்கு இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறது.


HD-யும் திரைப்படங்களும்:

திரைப்படங்களைப் பொருத்த மட்டில், HD பயன்படுத்தி ஹாலிவுட்டில் பல படங்கள் எடுத்துவிட்டார்கள். பிரபல இயக்குனர் 'மைக்கேல் மேன்'( ALI படத்தின் இயக்குனர்) தன்னுடைய 'Collateral' மற்றும் 'Public Enemies' ஆகிய படங்களை HD-இல் எடுத்தார். இரண்டு படங்களிலும் HD-யின் சிறப்பம்சங்களைப் பயன்படுத்தினார். இதைப் பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அவ்வளவு தகவல்கள் உள்ளன. 


தமிழில் முதல் படம் பி.சி.ஸ்ரீராம் எடுத்த 'வானம் வசப்படும்' . அப்புறம் சேரனின் 'தவமாய் தவமிருந்து' -இதன் ஒளிப்பதிவாளர் M.S.பிரபு அவர்கள். இப்போது நிறைய படங்கள் வந்துவிட்டன. HDV படம் கூட எடுத்துவிட்டார்கள். கமலின் 'உன்னைப்போல் ஒருவன்' RED ONE-இல் எடுக்கப்பட்டது.


தமிழில் முழுக்க முழுக்க டிஜிட்டலில் (RED ONE) எடுத்து டிஜிட்டலிலேயே திரையிடப்பட்ட படம் ' திருதிரு துறுதுறு'. இதன் இயக்குனர் 'நந்தினி'. ஒளிப்பதிவாளர் 'சுதிர் சவுத்ரி'.


'வெண்ணிலா கபடி குழு'-வின் ஒளிபதிவாளர் 'லட்சுமணன்' இப்போது ARRI D21-இல் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். 


வருங்காலம் HD தொழில்நுட்பமாக மாறிக்கொண்டு வருகிறது. நீங்களும் தயாராகிக்கொள்ளுங்கள்.

கருத்துகள்

 1. இன்றுதான் உங்கள் வலைதளத்துக்கு வந்தேன். (மூலம்.ஜாக்கிசேகர்)
  தமிழில் இப்படி ஒரு தொழிற் நுட்ப வலைப்பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.அட்டகாசமான நுட்பம் நிறைந்த வலைதளம். என் போன்ற திரைப்பட ஆர்வமுள்ளவர்களுக்கு சரியான தீனி போடக்கூடிய பதிவுகள். இவ்வலைதளத்தை எனக்கு தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்வேன். இவ்வளவு தெளிவாக எழுத ஆரம்பித்திற்க்கும் உங்களுக்கு எனது நன்றிகள். தொடர்ந்து பல விசயங்களை அறிமுகம் செய்யவேண்டுகிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அருமை....

  முடிந்தால் 3D டிவி மற்றும் 3D ஒளிப்பதிவு பற்றி கூறுங்களேன்.

  பதிலளிநீக்கு
 3. nalla pathivu.. niraya thagavalgal.. pagirnthu kondamaikku nandri.. ithu pol melum nalla thagavalagal eluthungal

  பதிலளிநீக்கு
 4. அருமையான விளக்கங்களுடன்கூடிய பதிவு. நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி விஜய் சார்.

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள நண்பர் ஆம்ஸ்டாங்,
  வணக்கம். உங்களின் வலைப்பூவை எதேச்சையாக பார்க்கநேர்ந்தது. அருமையான தகவல்கள். தான் பெற்ற அறிவை, அனுபவத்தை, மற்றவர்களிடமும் பகிர்ந்துக்கொள்ளும் மனோபாவம் எல்லோருக்கும் வராது. அந்த வகையில் நீங்கள் ஒரு அபூர்வம்! Please keep it up. நீங்கள் இந்த வலைப்பூவையே மறந்துப் போகும்படி, வருங்காலத்தில் மிகவும் பிசியாகக்கூடும். ஆனால் இந்த வலைப்பூ, உங்களின் அகில உலக மைக்ரோபோன்! விட்டு விட வேண்டாம். இது என் அன்புக்கட்டளை.
  உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளவேண்டிய, சிறந்த உலக சினிமா படங்களின் தொகுப்பாக, ஒரு வலைப்பூ என்னிடம் உள்ளது. அது பிரத்தியேக நண்பர்களுக்கு மட்டும். உங்களின் email address தெரிந்தால் உங்களுக்கும் ஒரு invitation அனுப்புவேன். வாழ்த்துக்கள். என் ஈமெயில் ; milkeywayman@gmail.com

  பதிலளிநீக்கு
 6. நன்றி..M.S.E.R.K. என்னுடைய email:vijayarmstrong@gmail.com

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  Hello

  you can register in our website http://www.thalaivan.com and post your articles

  install our voting button and get more visitors

  Visit our website for more information http://www.thalaivan.com

  பதிலளிநீக்கு
 8. //அருமையான தகவல்கள். தான் பெற்ற அறிவை, அனுபவத்தை, மற்றவர்களிடமும் பகிர்ந்துக்கொள்ளும் மனோபாவம் எல்லோருக்கும் வராது. அந்த வகையில் நீங்கள் ஒரு அபூர்வம்! Please keep it up. நீங்கள் இந்த வலைப்பூவையே மறந்துப் போகும்படி, வருங்காலத்தில் மிகவும் பிசியாகக்கூடும். ஆனால் இந்த வலைப்பூ, உங்களின் அகில உலக மைக்ரோபோன்! விட்டு விட வேண்டாம். இது என் அன்புக்கட்டளை. //

  நண்பர் M.S.E.R.Kயின் இந்த வரிகள்தான் எனது கருத்தும்.

  என் போன்ற சாதாரண சினிமா ரசிகனுக்கு இது போன்ற தகவல்கள் உங்களை போன்று துறையிலிருந்து வருவது படிக்க தூண்டுகிறது.
  (படங்களின் உதாரணத்துடன் நீங்கள் குறிப்பிட்டதை கூறுகிறேன்)

  பதிலளிநீக்கு
 9. என் போன்ற கட்புல தகவல் தொடர்பியல் (Visual Communication) விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மிக உபயோகமான தகவல்கள். வாழ்க உங்கள் பணி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. Respected sir, please write about the usage of digital camera like red one in our tamil cinema as well as the normal budget for a tamil cinema.

  பதிலளிநீக்கு
 11. தமிழில் தொழில்நுட்ப பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி!/ ....தமிழ்

  பதிலளிநீக்கு
 12. HD சேனல் என்ற பெயரில் இவர்களும் வசுலிக்கும் கட்டணம் பற்றி??MTUNES, ZEE போன்ற சேனல்கள் SD சேனலில் தங்கள் Resolution Quality'யை வேண்டும் என்றே குறைத்து விட்டு, HD சேனல் தெளிவாக தெரிவது போல் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.

  மேலும் ஒரு சந்தேகம். தற்பொழுது HD சேனல்களில் பழைய திரைப்படங்களும் காட்டுகிறார்களே, அது எப்படி?? அப்படி என்றால் இவர்கள் காட்டுவது உண்மையான HD திரைப்படம் இல்லையென்றுதானே அர்த்தம்??

  இணையத்தில் தேடியும் சரியான பதில் கிடைக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 13. அப்படி இல்லை சார்.. பழைய படங்களை HD தரத்தில் புதிதாக ஸ்கேன் செய்ய முடியும். அப்படி செய்திருந்தால் அது HD தரத்தில் இருக்கும். அல்லது வழக்கமான SD தரத்தை HD-யில் தருகிறோம் என்று ஏமாற்றலாம். பார்த்தாலே தெரிந்துவிடும்..

  பதிலளிநீக்கு
 14. அதாவது பழைய படத்தின் Original Negative - இருந்தால் மட்டுமே அது முடியும்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

நாம் அந்நியர்கள்

இரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை தங்களால் இதைத் தடுக்க முடியாது என்று வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா வணிகம் பார்த்திருக்கிறது. மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்திருக்கின்றன. உலகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்திருக்கிறது.  இது சமீபத்தில் நமக்கு அருகில் நிகழ்ந்த ஒன்றாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இது அதுவல்ல. இது நடந்து சில வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் சம்பவங்கள் ஒன்றுதான்.