முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விண்ணைத் தாண்டி வருவாயா- நேர்த்தியான படைப்பு

"விண்ணை தாண்டி வருவாயா"வில் உயர்ந்த ரசனையையும், உண்மையான காதலையும், சிறந்த தொழில் நுட்பத்தையும், தகுதி வாய்ந்த கலைஞர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கவுதம் வாசுதேவ் மேனன். இந்த படத்தின் கதையைப்பற்றி நாம் பேச வேண்டியது இல்லை. ஏனெனில்.. காதலித்த அனைவருமே அதைத் தாண்டித்தான் வந்து இருப்பார்கள். யதார்த்தமான கதை, நம் வாழ்க்கையிலையே நடந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் கொண்ட காட்சியமைப்புகள், நாமே பேசின, கேட்ட, பழகின வசனங்கள், நாம் அனுபவித்த உணர்வுகள் என படம் முழுக்க விரவி கிடக்கிறது. தமிழில் நாம் நிறைய காதல் படங்களைப் பார்த்திருக்கிறோம். நெகிழவைத்தவை, அழவைத்தவை என அதில் சில படங்களுண்டு. அந்த படங்களெல்லாமே சினிமா என்ற எல்லைக்குள்ளிருந்தே செயல்பட்டு இருக்கின்றன. இங்கே தான் இந்த படம் வித்தியாசப்படுகிறது. சினிமாவின் எல்லா கட்டுப்பாடுகிலிருந்தும் உங்களை விடுவித்து முழுமையான காதலை, வாழ்க்கையை உணரவைக்கிறது. தொழில்நுட்பம் என்று பார்த்தால்.. உயர்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தொழில்நுட்ப விதிகளுக்குள் கட்டுப்படாமல் தன் தேவை, ரசனை, படைப்பு என ...

படச்சுருள் வேலைசெய்யும் முறை

படச்சுருள் என்பதை, ஒரு பக்கத்தில் ஒளியைப் பதியச்செய்யக்கூடிய வேதிப்பொருள்கள் (photographic emulsion) பூசப்பட்டிருக்கும் ஒரு நீண்ட 'பிளாஸ்டிக் பட்டை' (செல்லுலாய்டு அல்லது பாலிஸ்டரால் ஆனது) என விளக்கலாம். ஒளியினால் மாற்றம் அடையக்கூடிய (ஒளியை உள்வாங்கிக்கொள்ளும்) 'ஸில்வர் ஹலைட்' (Silver Halide) என்னும் வேதிப்பொருள் ஒரு மெல்லிய பட்டையில் (Gelatin) பூசப்பட்டிருக்கும். ஒளிப்பதிவு முடிந்தவுடன், படச்சுருளை 'லேபில்' (Lab)  'ப்ராஸஸ்' (Process) செய்யும் போது ஒளி பதிந்த பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதியில் உள்ள வேதிப்பொருள் நீக்கப்படுகிறது. படச் சுருளில் பல அடுக்குகள் (Layers) உண்டு. முதலில் இருப்பது பாதுகாப்பு அடுக்கு. புகைப்படத்தின் மீது போடப்படும் கண்ணாடியைப் போன்றது. கீறல் விழாமல் தடுப்பதற்கு. அடுத்த அடுக்கு 'நீல வண்ண' ஒளியைப் பதிவுசெய்யும் (Blue Light Sensitive) தன்மை கொண்டது. 'டெவலப்' செய்யும் போது 'நெகட்டிவில்' (Negative) 'மஞ்சள்' (yellow) நிறமாக இது இருக்கும். அடுத்த அடுக்கு 'மஞ்சள்' (yellow) நிற 'ஃ...

விளக்குகள்(lights)

ஒளிப்பதிவு செய்ய மிக ஆதாரமாக வெளிச்சம் தேவைப்படுகிறது. வெளிச்சத்தை உருவாக்க தரமான விளக்குகள் பல உண்டு. இவை ஒளியின் தன்மையையும் வண்ணத்தின் தரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளன. ஆதார ஒளிகள்: ஒளிப்பதிவுக்கு ஆதாரமாக இரண்டு ஒளிவகைகள் உபயோகிக்கப்படுகின்றன. ஒன்று சூரியனிலிருந்து பெறப்படும் ஒளி 'டே லைட்' (Day light - சூரிய வெளிச்சம்) என்றும் செயற்கை விளக்குகளால் உருவாக்கப்படும் ஒளி 'டங்ஸ்டன் லைட்' (Tungsten Light- இழை வெளிச்சம்) என்றும் கொள்கிறோம். சூரியனால் உருவாக்கப்படும் 'டே லைட்' நீல நிறத்திற்கு அருகில் அதாவது, நீல நிறத்தை அதிகமாக கொண்டுள்ள வெள்ளை ஒளியாக இருக்கிறது. செயற்கை விளக்குகளால் உருவாக்கப்படும் 'டங்ஸ்டன் லைட்' (இழை வெளிச்சம்) மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒருவித காவி நிறத்தை (Warm Light - வாம் லைட்) தன்னுள் அதிகமாகக் கொண்டுள்ளது. 'டே லைட்'-ஐ செயற்கையாக உருவாக்க விளக்குகள் உண்டு. 'டே லைட்ஸ்' என்று அழைக்கப்படும் விளக்குகளிலிருந்து பெறப்படும் ஒளியானது சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியின் தன்மையை ஒத்திருக்கிறது. மாறு...

லென்ஸ் (Lens):

லென்ஸின் தேவை என்ன? கேமராவிலிருந்து லென்ஸை எடுத்து விட்டு, ஒரு கறுப்பு அட்டையில் துளையிட்டு அதை 'லென்ஸ் மவுட்ன்டில்' (Lens Mount) சுற்றி ஒட்டிவிடுங்கள். துளையின் வழியாக மட்டும்தான் ஒளி உட்செல்ல வேண்டும். அதாவது ஒரு 'பின் ஹோல் கேமரா' (Pinhole Camera) மாதிரியான அமைப்பை உருவாக்கி, படம் எடுத்துப்பாருங்கள். படம் வரும். தலைகீழாக இருக்கும். அதிக 'எக்ஸ்போஷர்' (Exposure) தேவைப்படும். நாம் லென்ஸைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? லென்ஸ் பிம்பத்தைத் தலைகீழாகத் திருப்பிப் பதிவுசெய்யும். லென்ஸ் குறைந்த வெளிச்சத்தையும் ஒன்று குவித்து கேமாராவுக்குள் அனுப்பும். இதனால் குறைந்த வெளிச்சத்திலும் படமெடுப்பது சுலபம். மேலும் பிம்பம் தெளிவாக இருக்கும். 'பின் ஹோல் கேமரா' அப்படியல்ல.  குறைந்த வெளிச்சத்தில் படமெடுப்பது கொஞ்சம் சிரமம். கிடைக்கும் ஒளியை ஒழுங்கமைத்து, ஒன்று குவித்து தெளிவான பிம்பத்தை பதிவுசெய்ய உதவுவதே லென்சின் வேலை என்பது இப்போது புரிந்திருக்கும். பொருளிலிருந்து பிரதிபலிக்கப்படும் ஒளியானது தெளிவாக, துல்லியமாக 'ஃபிலிம் கேட்' (film...

படச்சுருள்கள் (Film Roles):

படம் பிடிக்க தேவையான ‘Film'-ஐ தமிழில் ‘படச்சுருள்’ என அழைப்போம். இப்படச்சுருள்கள், ஒளியை அவை ஏற்கும் தன்மைக்கு ஏற்றவிதத்திலும், அதன் செயல்திறனின் அடிப்படையிலும் பல வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒளி வகைக்கான படச்சுருள்கள்: ஒரு பொருளின் மீது விழும் ஒளியின் வண்ணத்தால் அப்பொருளின் ஆதார நிறம் மாறும். அதாவது ஒரு வெள்ளைக் காகிதத்தின் மேல் விழும் சிவப்பு ஒளி அந்தக் காகிதம், சிவப்புக் காகிதம் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தும். நீல ஒளி நீலக் காகிதமாக நினைக்கத் தூண்டும். இதை நாம் எல்லாரும் அனுபவத்தில் கண்டிருப்போம். ஆனால் நாம் வெள்ளைக் காகிதத்தை அறிந்திருப்பதனால், அதன் மீது விழும் ஒளி எந்நிறமானாலும் அது வெள்ளைக் காகிதம்தான் என்று மிகச்சுலபமாகத் தெரிந்து கொண்டுவிடுகிறோம். இதற்கு மூளையும், நம் நினைவாற்றலும், முந்தைய அனுபவமும் உதவுகின்றன. ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு படச்சுருளினால் (Film) அப்படி உண்மையை உணர முடியாது. அது, தான் பார்க்கும் ஒளியை அப்படியே பதிவுசெய்கிறது. இங்கேதான் ஒரு பிரச்சனை. அதாவது ஒரு வெள்ளைக் காகிதத்தை 'டே லைட்'-இல் (Day light - சூரிய வெளிச்சம்...

கேமரா

திரைப்பட உருவாக்கத்தில், பல கருவிகள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன. ஒரு திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை எனத் தொடங்கி படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசைக்கோர்ப்பு என பல நிலைகளில் தேவை சார்ந்து பல கருவிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. எழுதப்பட்ட ஒரு திரைக்கதை, ஒரு திரைப்படமாக உருமாற, முதலில் அத்திரைக்கதை செல்லுலாயிட் படச்சுருளில்(அல்லது டிஜிட்டலாக) பதியப்பட வேண்டும். நடிகர்களின் மூலமாக கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டி, கதையை நிகழ்த்திப் பதிவு செய்கிறோம். அப்படி பதிவு செய்வதை படப்பிடிப்பு என்கிறோம். அதைப்பதிவு செய்யும் கருவியை கேமரா (Camera) என்கிறோம். கேமரா என்னும் கருவியோடு இணைந்து பல தொழில்நுட்பங்கள் ஒரு காட்சியைப் படச்சுருளில் பதிவுசெய்ய உதவுகின்றன. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக வரும் கட்டுரைகளில் பார்க்கப் போகிறோம். முதலில் கேமரா என்னும் ஆதாரக் கருவியைப்பற்றி ஒரு அறிமுகம். ஒரு புகைப்படக் கேமராவை நாம் அறிவோம். அதன் செயல்படும் முறையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அறியாதவர்கள் அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதை நான் இங்கே விளக்கப்போவதில்லை. இக்கட்டுரைகள் ஒளி...

'ஃபில்டர்ஸ்' (Filters):

'ஃபில்டர்கள்' (Filters) அதன் வழியே ஊடுருவிச்செல்லும் ஒளியின் தன்மையை மாற்றப் பயன்படுகின்றன. அதன் வழியே ஊடுருவிச் செல்லும் ஒளியிலிருந்து தன் வண்ணத்தை அனுமதித்து, பிற வண்ணங்களைத் தடுக்கிறது. ஒளியின் வண்ணத்தை நிர்ணயிக்கும் வெப்ப அளவை (color Temperature) மாற்ற உதவுகிறது, இதைப்போன்ற பல்வேறு பயன்பாட்டுகளுக்காக பல்வேறு விதமான ஃபில்டர்கள் பயன்படுகின்றன. இவற்றை லென்ஸின் முன்பாகவோ, விளக்கின் முன்பாகவோ அல்லது ஜன்னலிலோ, கதவிலோ பொருத்திப் பயன்படுத்தி ஒளியை நமக்குத் தேவையானபடி மாற்றிக் கொள்கிறோம். 'ஃபில்டர்கள்'  தூய்மையான கண்ணாடியால் தயாரிக்கப்படுகின்றன. அல்லது 'ஜெல்ஸ்' (Gels) என்றழைக்கப்படும் 'பாலிஸ்ட்டர்’ அல்லது  'பிளாஸ்டிக்’-ஐப் பயன்படுத்தி, அதில் தேவையான 'ஜெலட்டின்' கண்ணாடிகளை இணைத்தும் தயாரிக்கப்படுகின்றன. 'ஃபில்டர் ஃபேக்டர்' (Filter Factor): 'ஃபில்டர்கள்' (Filters) மூலம் உட்செல்லும் ஒளியில் குறிப்பிட்ட அளவு ஒளியை 'ஃபில்டர்கள்' உறிஞ்சிக் கொள்கின்றன (Light Absorption). அதாவது நம் வீடுகளில் திறந்திருக்கும் ஜன்னலை விட மூடப்ப...