முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒளியமைப்பின் முக்கியமான அடிப்படை : Three-point lighting Technique

ஒளியமைப்பில் மிக அடிப்படையாக ஒரு முறை இருக்கிறது , குறிப்பாக நபர்களை படம்பிடிக்கும் போது பின்பற்ற வேண்டியது இது. இந்த அடிப்படையைக் கொண்டுதான் பெரும்பாலான காட்சிகள் ஒளியமைக்கப்படுகின்றன. இது ' புகைப்படத்துறையிலும் ' பின்பற்றக்கூடிய ஒன்றுதான். Three-point lighting என்று அழைக்கப்படும் இ ம் முறையை ஆதாரமாக க் கொண்டுதான் எல்லா வகை ஒளியமைப்புகளும் செய்கிறார்கள். அதனால் அதைப்பற்றி நாம் தெரிந்துக்கொள்வது அவசியம். Three-point lighting என்பதை  மூன்று விளக்குகளைக் கொண்டு அல்லது மூன்று நிலைகளில் ஒளியமைப்பது என பொருள் கொள்ளலாம். 1. Key Light - ஆதார ஒளி 2. Fill Light - துணை ஒளி 3. Back Light - பின்புற ஒளி 1. Key Light - ஆதார ஒளி: இந்த 'Key Light' என்பது ஒரு 'Subject'- இன் ஒரு பக்கத்தில் இருந்து கொடுக்கப்படும் . அதாவது ஒரு நபரின் ஒருபக்கத்திலிருந்து . இடதுபக்கம் என்று வைத்துக்கொள்வோம். இப்படி ஒரு பக்கத்திலிருந்து ஒளி விழு ம்போது ஒரு பக்கம் ஒளியூட்டப்பட்டும், மறு பக்க த்தில் (வலதுப்பக்கம்) நிழலும் விழும். மேலும் இந்த 'Key Light' ஆனது அந்த &

துணைக் கருவிகள்: Accessories

எல்லா துறைகளிலும் முக்கிய கருவிகளுக்குத் துணையாக சில துணைக்கருவிகள் இருக்கின்றன. சில சமயங்களில் இந்தத் துணைக்கருவிகள் அத்தியாவசிய கருவிகளாகின்றன. அவை இல்லாமல் செயல்பட முடியும் என்றாலும், அவற்றின் தேவை தவிர்க்க முடியாததாகிறது. அப்படி படப்பிடிப்பின் போது 'கேமராவோடு' சம்பந்தப்பட்ட சில துணைக்கருவிகளின் அறிமுகம் இங்கே.

EOS 5D Mark II Camera : ஒரு அறிமுகம்

இப்போதெல்லாம் 5D-யில் படமெடுக்கிறார்கள் என்கிற செய்தியை அனைவர் காதிலும் விழுகிறது. அதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம். 5D என்பது Canon கேமராவின் EOS 5D Mark II மாடலைக் குறிக்கிறது. இது SLR வகை 'டிஜிட்டல்' கேமராதான். ஆனால் இதில் புதிய வசதியாக 'வீடியோ' எடுக்கும் வசதியையும் கொடுத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் SLR கேமராவைக்கொண்டு 'புகைப்படங்களை' மட்டும்தான் எடுக்க முடியும். வீடியோவிற்கு என தனியாக கேமராக்கள் உண்டு. அதைத்தான் இப்போது இந்த Canon EOS 5D Mark II மாற்றியமைத்திருக்கிறது.

சினிமா உருவாகும் முறை: Paper to Celluloid

ஒரு திரைப்படம் கதையாகக் காகிதத்திலிருந்து 'செல்லுலாய்ட்' படமாக மாற இடையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான பார்வை.  கதையை முடிவு செய்தவுடன் நண்பர்களோடு அல்லது தன் குழுவோடு அமர்ந்து விவாதித்து திரைக்கதையையும், வசனத்தையும் ஒரு திரைக்கதை எழுத்தாளரோ/ இயக்குனரோ எழுதிவிடுகிறார். பின்பு நீங்கள் கற்பனை கூட செய்யமுடியாத அளவில் அலைந்து திரிந்து எப்படியோ ஒரு தயாரிப்பாளரையும் (நட்சத்திர அந்தஸ்துள்ள ஹீரோவுக்கான கதையென்றால் குறிப்பிட்ட நடிகரையும்) பிடித்து விடுகிறார் என்று வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். தன் கதை சார்ந்து, ரசனை சார்ந்து படத்திற்குத் தேவையான சக தொழில்நுட்ப வல்லுனர்களையும் தேர்வு செய்கிறார் இயக்குனர். பின்பு 'லொக்கேஷன்' பார்த்தல், 'அரங்கம்' (set) அமைத்தல், உடைகள் தேர்ந்தெடுத்தல், 'சக மற்றும் துணை' நடிகர்கள் தேர்ந்தெடுத்தல், 'Shooting Script' தயாரித்தல், 'Break Down' போடுதல், 'Set Property' எழுதுதல் என நிறைய வேலைகள் இருக்கிறது. இதை எல்லாம் முடித்துவிட்டதாக கருதி நாம்

டெலிசினி: Telecine

டெலிசினி என்னும் இந்தத் தொழில்நுட்பம், நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. திரைப்படங்களை வீடியோவாக மாற்றி தொலைக்காட்சி பெட்டி,கணினி திரை ஆகியவற்றில் பார்க்கப் பயன்படுகிறது. 1950-களிருந்து டெலிசினி பயன்பாடு இப்படியாக இருந்தது. பின்பு 1990க்கு பிறகு 'ஆவிட்' (Avid) என்னும் படதொகுப்பு கருவியும் அதைச்சார்ந்த தொழில்நுட்பமும் வந்தபோது இந்த டெலிசினி தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடைந்தது.  இப்போது டெலிசினி தொழில்நுட்பம் திரைப்பட உருவாக்கத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. டெலிசினி செய்யப்படாமல் எந்தப்படமும் இன்று படதொகுப்பு செய்யப்படுவதில்லை. டெலிசினியோடு சம்பந்தப்படாமல் எந்தப் படமும் உருவாகிவிட முடியாது என்பது நிதர்சனம். படத்தொகுப்புக்காக, DVD-க்காக, தொலைக்காட்சிக்காக மட்டுமல்லாமல் திரையரங்கில் திரையிடலுக்காகவும் இன்று டெலிசினி தொழில்நுட்பம் பயன்படுகிறது. அதனால் 'டெலிசினி' சார்ந்த தொழில்நுட்பத்தை நாம் கொஞ்சமாவது அறிந்து கொள்ள வேண்டும். அதைச் செய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.

எடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை (From Editing to Print)- ஆதார தொழில்நுட்பங்கள்

திரைப்படத்தை உருவாக்க உதவும் முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்று படத்தொகுப்பு (எடிட்டிங்). படத்தொகுப்பின் நுணுக்கங்கள், விதிகள் என பல உண்டு என்றாலும் நான் இங்கே விவரிக்கப்போவது படத்தொகுப்பு எப்படிச் செய்யவேண்டும் என்கிற பாடத்தை அல்ல.  படத்தொகுப்பு செய்ய பயன்படுத்தப்படும் ஆதார தொழில்நுட்ப முறைகளைப்பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருள்கள் 'லேபில்' 'டெவலப்' செய்யப்பட்ட பிறகு, எப்படி திரைப்படமாக படத்தொகுப்பு செய்யப்படுகிறது என்பதைப்பற்றிய சிறிய விளக்கமே இந்தக் கட்டுரை.

"நம்முடைய பழிவாங்கல் என்பது நாம் பிழைத்திருப்பதுதான்"

இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் ஜெர்மனி 'பெலுருஷ்யா' (Belorussia) -வை 1941-இல் பிடித்தது. வழக்கம் போல நாஜிப்படை இட்லரின் யூத அழிப்பு வெறியை நடைமுறைப்படுத்தினார்கள். மிக வேகமாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு குடும்பத்தின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு, தப்பி பிழைத்த நான்கு சகோதர்கள் மட்டும் காட்டுக்குள் ஓடிப் பதுங்கினார்கள். மூத்தவர்கள் இருவரும் முப்பது வயதைக் கடந்தவர்கள். அடுத்தவன் இருபது வயதுக்குள் இருப்பவன். இளையவன் பத்துப் பன்னிரண்டு வயதுக்காரன். நாஜிப் படையிடமிருந்து தப்புவதற்காக, அருகிலிருந்த காட்டுக்குள் பதுங்குகிறார்கள். காடு இவர்களுக்கு அத்துப்படி. வெளிநாட்டுக்காரனான ஜெர்மனியர்களுக்கு காட்டுக்குள் வழி தெரியாது என்பதனால், காடு பாதுகாப்பான இடமாக இருக்கும் என கருதுகிறார்கள். எத்தனை நாள் இந்த காட்டுவாசம் என்பது தெரியாது. உணவுக்கு வழியேதுமில்லை. ஆரம்பத்தில் பழங்களை உணவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அது எத்தனை நாள் முடியும்?!